கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருதைச் சேர்ந்த அப்துல் ரகுமான் நஸார் (வயது 49) என்பவரை கடந்த திங்கட்கிழமை (22) தொடக்கம் காணவில்லை என அவரது குடும்பத்தவர்கள் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த நபர் கடந்த திங்கட்கிழமை காலை தனது மனைவியிடம் தொழில் நிமிர்த்தமாக அக்கரைப்பற்றிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றதாகவும் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கடந்த புதன்கிழமை கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது 183/ஜே/3 காரியப்பர் வீதி சாய்ந்தமருது 02 வசித்து வந்த இவர் தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் அம்பாரை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச விற்பனை முகவராக செயற்பட்டு வந்ததுடன், சவளக்கடை பொலிஸ் சந்தியில் அபிவிருத்தி லொத்தர் விற்பனையும் செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தொடர்பான ஏதாவது தகவல் தெரியவந்தால் அல்லது குறித்த நபரை யாராவது கண்டால் 0767901742, 0714024262 ஆகிய தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றனர்.