கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டால் நியமிக்கப்பட்ட ஏறாவூர் ஹிதாயத் நகர் அபிவிருத்திக் குழுவினரின் ஏற்பாட்டில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச் சந்திப்பில் அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஹிதாயத் நகர் பகுதி பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
இதன்போது அப்பிரதேச மக்களின் பொதுவான மற்றும் தனிப்பட்ட தேவைகள் பற்றி முதலமைச்சருக்கு எடுத்துக் கூறப்பட்டன.
அவற்றினை வெகு விரைவாக நிறைவேற்றித் தருவதாக முதலமைச்சர் உறுதியளித்தார்.
அங்கு வந்திருந்த தமிழ் சகோதரிகள் தங்களுக்கு குழாய்க் கிணறுகள் தேவையாக இருப்பதாக சொன்னபோது, உடனே உரியவர்களுக்கு தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு அங்கு வரவழைத்து தேவையான குழாய்க் கிணறுகளை அவசரமாக தயார்செய்து கொடுக்குமாறு பணித்தார்.