சிறுபான்மை சமூகங்களின் தனித்துவம் பாதுகாக்கப்படவேண்டும் -ஷிப்லி பாறூக்






எம்.ரீ. ஹைதர் அலி-


சிறுபான்மை சமூகங்களின் தனித்துவமான கௌரவம், உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட வேண்டும் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

இந்த நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகங்களின் தனித்துவமான கௌரவம், உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பவற்றை பாதுகாக்கும் பொருட்டு தமிழ் மக்களின் ஒருமித்த குரலாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம்களின் குரலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரசும் ஒருமித்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து வறிய குடும்பத்தைச் சேர்த்தவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் பாலமுனை, காங்கேயனோடை, ஆரயம்பதி, மாவிலங்கு துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு சுய தொழிலுக்கான இடியப்ப உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் என்பன வழங்கும் நிகழ்வு அண்மையில் பாலமுனை அல்-ஹிதாயா பாலர் பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்...

இவ்விரு பாரிய கட்சிகளும் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி தங்களுக்கிடையில் புரிந்துணர்வுடன் மிகவும் சிறந்த முறையில் மக்களை வழிநடாத்திக் கொண்டிருக்கின்றது.

தற் காலத்தில் அரசியல்வாதிகள் தமது அரசியல் இலாபங்களுக்காக மக்களை இன ரீதியாக பிளவுபடுத்தி செயற்படுகின்றமையே சிறுபான்மை மக்கள் மத்தியில் இன ரீதியான பாகுபாடுகள் ஏற்பட பிரதான காரணமாக அமைந்துள்ளது. தற்காலத்தில் அத்தகைய வழிமுறைகளை இன்றும் சில அரசியல் வாதிகள் தமது அரசியல் இருப்புகளை தக்க வைத்துக் கொள்வதற்காக முன்னெடுத்து வருகின்றனர்.

மக்களை இன ரீதியாக பாகுபடுத்ததி தமது அரசியல் நடவடிக்கைகளை முன்கொண்டு செல்லக்கூடிய இத்தகையவர்கள் தொடர்பாக மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். மேலும் இந்நாட்டில் இன மத ரீதியான பாகுபாட்டு அரசியல் நடைமுறைகள் இல்லாதொழிக்கப்பட்டு அனைத்து இன மக்களையும் சமமாக மதிக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் உருவாக்கப்பட வேண்டும்.

அதனூடாக இந்த நாட்டின் அனைத்து மக்களும் ஒன்றுபட்டு தமக்கான தீர்வுகளை நோக்கி பயணிக்க வேண்டும். அந்த அடிப்படையில் தான் இன்று நாங்கள் இந்த உதவித்திட்டங்களை முஸ்லிம்களை மாத்திரமன்றி எமது சகோதர இனமான தமிழ் மக்களையும் உள்ளடக்கியதாக மேற்கொண்டுள்ளோம்.


மேலும் தொடர்ச்சியாக இத்தகைய பல உதவித்திட்டங்களை எத்தகைய பாகுபாடுகளுமின்றி தேவையானவர்களை முன்னுரிமைப்படுத்தியதாக முன்னெடுக்கவுள்ளோம் எனவும் தனது உரையில் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -