எஸ்.அஷ்ரப்கான்-
ஸ்ரீ லங்கா கராத்தே சம்மேளனம், தேசிய தரத்திலான நடுவர் பரீட்சையினை கடந்த ஜனவரி மாதம் நடாத்தியது. அந்த பரீட்சையில் “Judge – B” தரத்தில் சித்தியடைந்த மாணவர்களான யு.எல்.எம்.சரூஸ், ஏ.இர்ஷாத், எம்.ஐ.எம்.காலித், எம்.எஸ்.எம்.பர்சான் ஆகியோர்களுக்கு அண்மையில் பயிற்சி நிலையமான சாய்ந்தமருது இளைஞர் சேவைகள் மன்றத்தில் வைத்து சான்றிதல்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அம்பாறை பிரதேசத்திலிருந்து இந்த பரீட்சையில் முதன் முதலாக 1998 ஆம் ஆண்டு பயிற்றுவிப்பாளர் இக்பால் சித்தியடைந்திருந்த நிலையில் அதன் பின்பு எவரும் இந்த தரத்தினை பெற்றிருக்கவில்லை. அதன் பின்னர் நீண்ட காலங்களுக்குப் பிறகு காலித், பர்சான் ஆகியோர் மட்டுமே இந்த தரத்தினை பெற்றுள்ளார்கள்.
அத்துடன் சம்மாந்துறை பிரதேசத்தில் முதன்முறையாக இர்ஷாத் என்ற மாணவன் இந்த தரத்தினை பெற்றுள்ளார் என்பதும் சிறப்பம்சமாகும்.