எச்.எம்.ஹலால்தீன்-
திருகோணமலை மாவட்டம் -கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சட்டவிரோதமான முறையில் கசிப்பு (வடிசாராயம்) வடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் அதற்குத் தேவையான பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் இன்று (2017.05.01) மாலை 3.00 மணியளவில் இடம் பெற்றாதாக கிண்ணியாப் பொலிஸார் தெரிவித்தனர்.
கசிப்பு வடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும்.இரண்டு வறள்களும் ஒவ்வொரு பறளிலும் சுமார் 180000,170000 மி;ல்லி லீட்டர் ஹோடா மற்றும் செப்புக்கம்பிகள் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை சுமார் 40000 ரூபாப் பெறுமதி மதிக்கத்தக்கது எனப் பொலிஸார் தெரிவித்தனர். இதில் தொடர்புடைய; எவரும் கைது செய்யப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
கிண்ணியா பொலிஸ் 026 2236 222