கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய த்தினூடாக பயணம் செய்யும் பயணி ஒருவர் கைப் பையில் கொண்டுவரக்கூடிய திரவங்கள், ஸ்பிரே வகைகள், ஜெல் போன்ற பொருட்களின் அளவு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக விமான சேவைகள் நிறுவனத்தின் முகாமையாளர் எச்.எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த விதிகளுக்கு அமைவாக அணைத்து பொருட்களும் ஒரு லீற்றருக்கு அதிகமாகக் கூடாது எனவும், அனைத்து திரவ கொள்கலன்களும், 20x20 என்ற அளவிலான வௌிப்படையாக தெரியும், திறந்து மீள மூடக்கூடிய வகையிலான பொலித்தின் பைகளில் போடப்பட்டிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு பயணி ஒருவர் ஒரு பையை மாத்திரமே இவ்வாறு கொண்டு செல்லலாம் எனவும், மேலதிகமாக கொண்டு செல்லும் பைகளை விமான சீட்டுகளை பரிசோதனை செய்யும் இடத்திலிருந்து கொண்டு செல்ல முடியுமெனவும், குறித்த விதிகளுக்குள் நீர், குடி பாணங்கள், சூப், ஜேம், சோஸ் வகைகள், நீராவி திரவ வகைகள், ஜெல் வகைகள், அறை வெப்பங்களை பராமரிக்கும் திரவங்கள் உள்ளிட்ட பொருட்களும் அடங்குமென நிறுவனத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சட்ட விதிகள் யாவும் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஜூன் முதலாம் திகதிமுதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(வீ)