அரசாங்கத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்களை கிளர்ச்சியின் பக்கம் தூண்டி விடும் செயற்பாடுகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மேற்கொண்டு வருகின்றனர். மீண்டும் நாட்டில் ஆயுத கலாசாரம் ஒன்றை மஹிந்த எதிர்பார்க்கின்றார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் கபீர் ஹசிம் தெரிவித்தார். மோடியின் வருகை இலங்கைக்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அண்மைக்கால அரசியல் செயற்பாடுகள் மற்றும் இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் ஆகியன தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.