சிரேஷ்ட ஊடகவியலாளர்: எம்.ஐ.முபாரக்-
ஆனால்,இவ்வாறான செயற்பாடுகள் அனைத்திலும் இருந்து மாறுபட்டவர்தான் விமல் வீரவன்ஸ.அதனால்தான் அவரால் அந்தக் கட்சியில் தொடர்ந்து இருக்கமுடியாமல் போனது.
அவர் பாவிக்கும் ஆடைகள்,தலைக்கான ஜெல் வகைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் போன்றவை விலை உயர்ந்தவையாகும்.முடி வெட்டுவதுகூட விஐபிகளுக்கான சலூன்களில்தான்.
விமலின் ஹெயார் ஸ்டைலும் அதற்கு பூசும் ஜெல் வகைகளும் எப்போதும் பிரபல்யம்.
அண்மையில் சீனாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர்சென்றிருந்தனர்.அவர்களுள் விமல் வீரவன்ஸவும் ஒருவர்.
விமலின் முடி அழகையும் அதற்கு பாவிக்கும் ஜெல் வகைகள் பற்றியும் அதிகம் கேள்விப்பட்ட ஆளுங்கட்சியைச் சேர்ந்த புதிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விமல் என்ன வகையான ஜெல் பாவிக்கின்றார் என்று அறிவதற்கு ஆசைப்பட்டாராம்.
விமல் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த நேரம் பார்த்து அந்த புதிய எம்பி விமலின் பின்னால் சென்று விமலுக்குத் தெரியாமல் முடியை மெதுவாகத் தடவிப் பார்த்தாராம்.ஆனால்,அவர் எதிர்பார்த்ததுபோல் ஜெல் எதுவும் பூசி இருக்கவில்லையாம்.
இந்த விடயத்தை அந்த எம்பியின் ஊடாகவே பின்னர் அறிந்துகொண்ட விமல் இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கினார்.அரசியல் இலாபம் தேட முற்பட்டார்.
இந்தச் சம்பவத்தை ஆதாரமாக வைத்தே தான் ஆடம்பரப் பிரியன் அல்ல என்றும் தன்மீது அரசியல் எதிரிகள் திட்டமிட்டே சேறுபூசுகின்றனர் என்றும் கூறி வந்தார்.
விமலின் நல்ல நேரம் அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் ஜெல் பூசி இருக்கவில்லை என்று விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.