பல்லேவல பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அவர் கடமைக்கு செல்லும் வழியில் கடத்தி துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கடமைக்கு செல்லும் வழியில் கார் ஒன்றில் வந்த நபர் ஒருவர் அவரை காரில் ஏற வற்புறுத்தியுள்ளார்.
இதனை அந்தப் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் நிராகரிக்கவே அவரை பலாத்காரமாக காரில் ஏற்றிச் செல்லும் நோக்குடன் அவரை இழுத்து காரில் கடத்திச் செல்ல முயன்றுள்ளார். எனினும் இதிலிருந்து தப்பியுள்ள பெண் பொலிஸ் உத்தியோகத்தர் விடயத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடாக பதிவு செய்துள்ள நிலையில் உடன் செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.