ஹக்கீமின் விடாமுயற்சியினால் முள்ளிக்குளத்தின் ஒரு பகுதியிலிருந்து படையினர் வெளியேற்றம்.

முகம்மத் இக்பால் சாய்ந்தமருது -

மைச்சர் ஹக்கீமின் விடாமுயற்சியினால் முள்ளிக்குளத்தின் ஒரு பகுதியிலிருந்து படையினர் வெளியேற்றம்.

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச சபைக்குட்பட்ட முள்ளிக்குளம், சிலாவத்துறை ஆகிய பிரதேசங்களில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில் கடற்படையினர் முகாம் அமைத்துள்ளார்கள்.

இந்த முகாமிலிருந்து படையினர்களை வெளியேற்றி அந்த நிலங்களை பொது மக்களிடம் கையளிக்குமாறு மிக நீண்ட காலங்களாக முஸ்லிம் காங்கிரசும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசாங்கத்தினை வலியுறுத்தி வந்தது.

சிலாவத்துறை மற்றும் முள்ளிக்குளம் ஆகிய பொதுமக்களின் காணிகளிலிருந்து கடற் படையினர்களை வெளியேற்றுமாறு, 2009 தொடக்கம் 2016 வரையில் சுமார் இருபத்திஐந்து தடவைகள் பாராளுமன்றத்தில் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் உரையாற்றி இருக்கின்றார். பாராளுமன்ற ஹன்சாட் மூலமாக இதனை அறிந்துகொள்ள முடியும்.

அதுபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்களும் இந்த கடற்படையினர்களின் வெளியேற்றம் குறித்து அதிக தடவைகள் பாராளுமன்றத்தில் உரையாற்றியதுடன், மக்கள் போராட்டங்களையும் நடாத்தி இருந்தார்கள்.

ஆனால் இந்த பிரச்சினைக்கு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல், ஏதோ காரணங்களை கூறி அப்பகுதியிலிருந்து படையினர்களை வெளியேற்றுவதில் அரசாங்கம் காலத்தினை கடத்திகொண்டு வந்தது.

இருந்தாலும் அண்மைக்காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் இணைந்து அரசாங்கத்துக்கு வழங்கிய அழுத்தங்கள் காரணமாக நேற்று 30.04.2017 இல் முள்ளிக்குளத்தின் ஒரு பகுதியிலிருந்து படையினர்கள் வெளியேறி அந்த நிலங்களை பொதுமக்களிடம் கையளித்தார்கள்.

முள்ளிக்குளத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் பொதுமக்களின் நிலங்களை படையினர் ஆக்கிரமித்து முகாம் அமைத்திருந்தார்கள். இதில் அதிகமான நிலங்கள் தமிழர்களுடையதும், ஏனையவை முஸ்லிம்களுக்கு சொந்தமானதாகும். அதேவேளை சிலாவத்துறை பிரதேசத்தின் அதிகமான நிலங்கள் முஸ்லிம்களுக்குரியதும், ஏனையவைகள் தமிழர்களுக்குரியதுமாகும்.

இதற்கிடையில் சிலாவத்துறையில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மக்களின் நிலங்களை அம்மக்களிடம் மீண்டும் கையளிக்க கோரி பாராளுமன்ற உரைக்கு அப்பால் அரசாங்கத்துடன் பல தடவைகள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார்.

அந்தவகையில் கடந்த 28.04.2017 இல் குறிப்பிட்ட கடற்படை முகாம்களை அகற்றுவது தொடர்பாக ஜனாதிபதியுடன் அமைச்சர் ரவுப் ஹக்கீம் பேச்சுவார்த்தை நடாத்தினார். அப்போது அமைச்சர் ஹக்கீம் முன்னிலையில் ஜனாதிபதி அவர்கள் கடற்படை கொமாண்டருடன் தொலைபேசி மூலமாக சிலாவத்துறை படை முகாமினை அகற்றுவது தொர்பாக பேசியுள்ளார். விரைவில் சிலாவத்துறை கடற்படை முகாமும் அங்கிருந்து அகற்றப்பட்டு பொது மக்களிடம் கையளிக்கப்படும் என்ற உறுதிமொழி ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

சிலாவத்துறையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் தொடர்பான ஆவணங்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அவர்களினால் ஒன்று திரட்டப்பட்டு கடந்த 27.04.2017 இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க சிலாவத்துறை கடற்படை முகாமை இடமாற்றக்கோரி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் சில மாதங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் பிரதமரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

சல்மானின் கேள்விக்கு புதுவருடத்தின் பின்னர் இதுகுறித்து தாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் பேசுவதாக அப்போது பிரதமர் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -