"நீரின் கட்டணத் தொகையில் சிறுமாற்றத்தை கொண்டு வர வேண்டி இருக்கிறது" ரவூப் ஹக்கீம்

இக்பால் அலி-

சுத்தமான குடி தண்ணீர் வழங்குவது சாதாரண விடயமல்ல. அதற்காக கூடுதலான கஷ்டங்களையும் சவால்களையும் எதிர் கொண்டு அரசாங்கம் மேற்கொணடு வருகின்றது. ஒரு லீட்டர் தண்ணீர் போத்தல் நாங்கள் ரூபா 60 கொடுத்துப் பெற்றுக் கொள்கின்றோம். ஆனால் அரசாங்கம் 1000 லீட்டருக்கு மிகவும் சொற்பதொகையாக 12 ரூபாதான் அறவிடுகின்றது. நீர் விநியோகத் திட்டத்தையும் அமுல் படுத்தி நீரையும் பாதுகாக்கின்ற வேலைத் திட்டத்திற்காக நீரின் கட்டணத் தொகையில் சிறுமாற்றத்தை கொண்டு வர வேண்டி இருக்கிறது. அரசாங்கம் நுகவோருடைய தண்ணீர்ப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக பாரிய பங்களிப்பைச் செய்து வருகின்றது. இதனுடைய நன்மை தீமைகளை ஊடகத் துறையினர் நன்கு அறிந்து கருத்துக்களை வெளியிட வேண்டும் என்று நகர திட்டமிடல் நீர் வழங்க வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஷ்வி ஜவஹர்ஷாவின் வேண்டுகோளின் பிரகாரம் பொல்கஹவெல, அளவ்வ, குருநாகல், மல்லவப்பிட்டிய ஆகிய நான்கு பிரதேச செயலகத்திலுள்ள 167,725 பயனாளிகளின் நன்மை கருதி 2000 கோடி ரூபா செலவில்( 20,207) மில்லியன் ரூபா செலவில் இந்தியாவின் எக்ஷிம் வங்கி இலங்கை வங்கி இலங்கை அரசாங்கம் இணைந்து ஒருங்கிணைந்த நீர் விநியோகத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவம் மாகாண சபை உறுப்பினர் ரிஷ்வி ஜவஹர்ஷாவின் தலைமையில் (28) குருநாகல் பொத்துஹெரவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நகர திட்டமிடல் நீர் வழங்க வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;

விசேடமாக மாஹோ பிரதேசத்தில் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் மக்கள் 1000 பேர் அளவில் சுத்தமான தண்ணீரைப் பெற்றுக் கொள்ளமுடியும் எனினும். அங்கு நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை எட்டும் வகையிலும் உள்ள தண்ணீரைப் பாதுக்கின்ற நடவடிக்கையிலும் ஈடுபட்டுவருகின்றோம். பல அமைச்சர் இருந்த போதிலும் தண்ணீரைப் பாதுகாப்பதற்கு வேறாக தனியானதொரு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்னுடைய கருத்தாகும். உண்மையிலேயே மாஹோ பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் ஆற்றை மறித்து யட்டிமான பிரதேசத்தில் சுத்தமான குடி விநியோகத்தை தி;டடத்தை ஆரம்பிக்கவுள்ளோம். இது சம்மந்தமாக நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். ஏனென்றால் நீண்ட காலம் நிர்மாணிக்கப்பட்ட அம்பதெலேவௌp கலட்டுவாவேவௌp போன்ற நீர்விநியோகத் திட்டத்திற்குப் பின்னர் இரண்டாம் கட்டமாக எவையும் மேற்கொள்ளப்பட வில்லை. குறைந்தளவு சரி இது தொடர்பாக கவனத்தில் கொள்ளவில்லை. நாங்கள் இதனை மிக வரைவில் மேற்கொள்ளவுள்ளோம். விசேடமாக இதற்காக ஜனாதிபதியும் பிரதமரும் கூடுதல் கவனம் எடுத்து வரகின்றார்களட என்பதையுமு; சந்தோசத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன். 

எமது செயற் திட்டத்திற்கு திரைசேறியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. எமது வேலைத் திட்டங்களை எங்கேவது சரி கடன் நிதி உதவியை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு எனக் கூறியுள்ளனர். எனினும் திறைசேறி எங்களுக்கு உத்தரவாதம் ஒன்றைத் தந்துள்ளார்கள். எனினும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான சலுகையினை திறைசேறி வழங்கியுள்ளது. எனினும் கடனைப் பெற்றுத் தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். அவ்வாறாயின் நீர் வரி அறவீடு சம்மந்தமாக நாங்கள் நிறையப் பேச இருக்கிறது. இது அரசியல் ரீதியாக வெளிக்கொணரப்படும். இதனை நாங்கள் பேசிப் பேசி இருக்கவும் முடியாது. விசேடமாக பொல்கஹவெல, அளவ்வ தம்பதெனிய பிரதேசத்தில் வாழும் மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தவர்களுக்கு பிரதமர் ரனில்p விக்கிரமசிங்க இந்தியாவுக்குச் சென்று இந்தியாப் பிரதமர் நரேந்திர மோடியுடன் விசேடமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பிரகாரம் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பிரதமர் அங்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபடாமல் விட்டிருந்தால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது. அதற்கான வட்டி வட்டி விகிதத்தை குறைப்பதற்கு இணக்கப்பாடு தெரிவித்தமையினால்தான் இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பிக்க முடிந்துள்ளது. வெசக் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மே மாதம் நடுப்குதியில் 10, 11 எமது நாட்டு விஜயம் செய்கின்றார். அவரது இலங்கைககான உத்தியோகபூர்வ விஜயமும் இந்த கடனுதவித் திட்டமும் எமக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது.

இந்தியாவின் அனுசணையுடன் மூன்று வேலைத் திட்டங்கள் குருநாகல் மாவட்டத்தில் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளன. அது தான் கட்டுகம்பொல தேர்த்ல தொகுதியில் பன்னல் நிர்விநியோகத் திட்டம். அது கூட பாரியளவிலான வேலைத் திட்டமாகும். இவை எல்லாவற்றையும் செய்வதற்கான சவால்களை நாங்கள் முகம் கொடுக்க வேண்டும்.

மிகவும் சொற்பன தொகையினைத் தான் நாங்கள் நீருக்காக வரியை அறவீடு செய்கின்றோம். தண்ணீர் ஒரு லீட்டர் போத்தலொன்றுக்கு ரூபா 60 செலுத்த வேண்டும். நாங்கள் 1000 லீட்டருக்கு ரூபா 12.00 அறவிடுகின்றோம். நாங்கள் கூடுதலான செலவுகளைச் செய்து மக்கள் சுத்தமான தண்ணீரைக் குடிப்பதற்காக காலடிக்கு அனுப்பி வைக்கின்றோம். இதற்காக பாரியளவிலான செலவு செய்யப்படுகிறது. அதனுடைய கஷ்ட நஷடங்களை நுகர்வோர் அறிய வேண்டும். குறிப்பாக ஊடாகவியாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தான் இது தொடர்பாக பெரிது படுத்திக் காட்டுபவர்கள். நாங்கள் தண்ணீரின் கட்டணத்திற்காக வரியை அறவிடச் சென்றால் பெரிளயவில் அதனைக் காட்ட முற்படுகின்றனர். இந்த நீர் விநியோகத் திட்டத்தை முன்னெடுத்தச் செல்ல நீர் வழங்கல் அதிகார சபை கூடுதலான பங்களிப்பை செய்கின்றார்கள். பொறியாலாளர்கள் 400 உதவிப் பொறியியலாளர்கள் 1000 க்கும் மேற்பட்டோர் இரவு பகலின்றி பாராமல் வேலை செய்துதான் இத்தகைய வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றோம். எனினும் இந்ந நிறுவனத்தை பொருளாதார ரீதியாக பாதுகாப்பை ஏற்படுத்த எங்களுக்கு நேரிடுகின்றது.

நீர் கட்டணம் செலுத்துவது தொடர்பாக வெகுவிரைவில் ஒரு தீர்மானம் வெகுவிரைவில் எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, வடமேல் மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் செனரத், மாகாண சபை உறுப்பினர் டி. பீ. அஜித் ரோஹன அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -