வெள்ளை மாளிகையில் ரமலான் பண்டிகை நிகழ்வுக்கு மறுப்பு

மெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையில் ரமலான் பண்டிகையை துவக்கி வைப்பதற்கு அந்நாட்டு வெளியுறவு துறை செயலாளர் மறுப்பு தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமியர்களின் முதன்மை பண்டிகையான ரமலான் நாளை முதல் தொடங்கியுள்ளது.

உலக நாடுகள் இப்பண்டிகையை உற்சாகமாக தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை இப்பண்டிகை மீது அக்கறை செலுத்தாது இஸ்லாமியர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவில் குடியரசு அல்லது ஜனநாயக கட்சி என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அக்கட்சியை சேர்ந்த வெளியுறவு துறை செயலாளர் வெள்ளை மாளிகையில் ரமலான் பண்டிகையை துவக்கி வைப்பது அல்லது இறுதி நாளில் பங்கேற்பது பல ஆண்டுகளாக பின்பற்றி வரும் ஒரு மரபாகும்.

ஆனால், தற்போதைய டிரம்ப் தலைமையிலான அரசு இந்த மரபை மீறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளை மாளிகையில் ரமலான் பண்டிகையை துவக்கி வைக்க தற்போதையை வெளியுறவு செயலாளரான ரெக்ஸ் டில்லர்சனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால், இந்த அழைப்பினை ரெக் டில்லர்சன் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்லாமியர்களின் கோரிக்கையை நிராகரிப்பதன் மூலம் டிரம்ப் அரசுக்கு இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வு அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -