நமது நிருபர்-
காரைதீவைச்சேர்ந்த எமது சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜாவின் சகோதரி ஓய்வுநிலை பிரதிஅதிபர் திருமதி சகுந்தலாதேவி தர்மலிங்கம் தனது 69வயதில் திங்களன்று காலமானார். தொழினுட்ப உத்தியோகத்தர் மார்க்கண்டு தர்மலிங்கம் அவர்களின் மனைவியான இவர் காரைதீவைச்சேர்ந்த தம்பிராஜா தங்கநாயகம் தம்பதிகளின் புதல்வியாராவார்.இவருக்கு 5சகோதரர்களும் 2சகோதரிகளும் உள்ளனர். எமது ஊடகவியலாளர் சகா குடுபத்தில் இளையவராவார்.
கல்வி ஆசிரியசேவையில் 30வருடத்தைப்பூர்த்திசெய்த இவர் இறுதியாக காரைதீவு இ.கி.மி.ஆண்கள் பாடசாலையில் ஆசிரியராக பிரதிஅதிபராக இருந்து 2008இல் ஓய்வுபெற்றிருந்தவர். கடந்த ஒருமாதகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர் திங்களன்று இரவு 7.30மணியளவில் இறைபதமடைந்தார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் நேற்று செவ்வாய்க்கிழமை காரைதீவு இந்துமயானத்தில் நடைபெற்றது.