சைட்டத்திற்கு எதிராக கல்முனையில் கண்டனப் பேரணி..!

அஸ்லம் எஸ்.மௌலானா-
சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பாறை மாவட்ட மருத்துவ பீட மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை கல்முனையில் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது.

'சைட்டத்தை மூடு அல்லது நூறு வீதம் அரசுடைமையாக்கு' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இப்பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான மருத்துவ பீட மாணவர்களுடன் அரச வைத்திய அதிகாரிகள், பல் மருத்துவர்கள், ஆயர்வேத வைத்தியர்கள் உட்பட மற்றும் சில தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை முன்றலில் ஒன்றுகூடிய இவர்கள் அங்கிருந்து கல்முனை பொலிஸ் நிலைய சந்தி, அரச செயலக கட்டிடக் தொகுதி சந்தி, ஹிஜ்ரா சந்தி, ரவுண்டபோர்ட் சந்தி ஊடாக சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்று கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தனர். அங்கு சைட்டத்திற்கு எதிரான பொதுக் கூட்டமொன்றும் நடைபெற்றது.

இப்பேரணியில் பங்கேற்றவர்கள் சைட்டத்திற்கு எதிராகவும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைக் கண்டித்தும் எழுதப்பட்டிருந்த பல்வேறு வகையான வாசகங்களைத் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷமெழுப்பிச் சென்றனர். இதன்போது சைட்டத்திற்கு எதிரான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. 

இப்பேரணி காரணமாக கல்முனை- அக்கரைப்பற்று நெடுஞ்சாலையிலும் கல்முனை- மட்டக்களப்பு நெடுஞ்சாலையிலும் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது. இதன்போது பெருமளவு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -