சில அரசியல்வாதிகள் சிலகாலங்களுக்கு பேசப்படுவார்கள், சில அரசியல்வாதிகள் வரலாற்றில் பேசப்படுவார்கள் அந்தவகையில், அதா வரலாற்றில் பேசப்படவேண்டியவர்தான்.
புலிகளினால் நாம் பாதிக்கப்படும் போது துணிந்துநின்று குரல் கொடுத்தவர்...
முஸ்லிம்களின் அடிமைச்சாசனமான வடக்குகிழக்கு இணைப்பை சந்தர்ப்பம் பார்த்து பிரித்தெடுப்பதற்கு உதவியவர்.
தான் தோற்றாலும் பரவாயில்லை நன்றிக்கடனுக்காக மஹிந்தபக்கம் நின்றவர்.
மற்ற அரசியல்வாதிகள் போன்று கட்சிமாறியிருந்தால் அவரும் ஆட்சியில் ஒருபங்காளியாக இருந்திருப்பார் ஆனால் அப்படி அவர் செய்யவில்லை.
மஹிந்த புலிகளை அடக்கிவிட்டு 2010ம் ஆண்டு கிழக்குவாழ் முஸ்லிம் மக்களிடம் வாக்குகேட்டுவந்த போது, டயஸ்போராக்களின் கோடிகளுக்கு சோரம்போனவர்கள், முஸ்லிம்கள் வந்தேரு குடிகள் என்று லண்டனில் வைத்து பேசிய சரத்பொன்சேகாவுக்கு வாக்களித்து நன்றிமறந்தவர்களின் கூட்டத்திலே சேர்ந்தபோதும், தான் மட்டும் நியாயத்தின் பக்கம் நின்று சாதித்துகாட்டியவர்.
அதன் பிறகு இனவாதிகளின் அடாவடித்தனங்களை மஹிந்த கண்டிக்கதவரினார் என்று, இவர் கூறவில்லை என்று இவர்மீது குற்றச்சாட்டு இருந்தது உண்மைதான், அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு இவரை மட்டும் யாரும் குற்றம் சொல்லமுடியாது காரணம் அந்த நேரம் மற்ற முஸ்லிம் தலைவர்களும் மஹிந்த அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருந்தவர்கள்தான் அவர்களும் மௌனிகலாகவே இருந்தனர்.
மஹிந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை வைக்காது விட்டிருந்தால், இன்று நல்லாட்சியிலே நல்லபிள்ளைகள் போன்று ஒட்டிக்கொண்டிருக்கும் முஸ்லிம் தலைவர்கள் யாரும் மஹிந்தவை விட்டு வந்திருக்கமாட்டார்கள். அதே முஸ்லிம் தலைவர்கள் மஹிந்தவுக்கு ஜால்ரா அடித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.
இப்படியான பச்சோந்திகளான முஸ்லிம் தலைவர்கள் செய்யும் செயல்களில் மட்டும் குற்றம்காணாத நமது சமூகம் அதாவுல்லாவை மட்டும் குற்றம் காண்பது என்பது வியப்பான விடயமாகவுள்ளது.
இன்று தான் பதவியில் இல்லாது விட்டாலும் தன் சமூகத்தின் பிரச்சினைகளை அரசியலுக்கு அப்பால் சென்று எல்லா கட்சிகளையும் ஒன்றுசேர்த்து முதல்கட்டமாக கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினையை பார்ப்போம் என்று (கிழக்கின் அவயம் )என்ற ஒரு சபையை ஆரம்பித்து சமூகத்தின் பற்றை காட்டிவருகின்றார்.
அத்தோடு கண்டிக்கு சென்று மகாநாயக்க தேரரை சந்தித்து முஸ்லிம்களின் பிரச்சினையை அவருக்கு எடுத்துக்கூறியிருந்தார்.
இந்தவிடயங்கள் எல்லாம் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பாய் அமையவேண்டும் என்று கருதுகின்ற நடுநிலைவாதிகள் இதனை ஆதரித்து நிற்கின்றார்கள் என்பது (கிழக்கின் அவயம்) நடந்த முதலாவது ஒன்றுகூடலில் தெறிந்தது.
எல்லா ஊரிலிருந்தும் ஆயிரக்கணக்காண புத்திஜீவிகள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டதே அதற்கு ஆதாரமாகும்.
என்னதான் இருந்தாலும் அதாவுல்லா அவர்களும் எதிர்காலத்தில் மற்றஅரசியல் வாதிகள் போன்று நடந்து கொள்வாரேயானால் அவரும் வரலாற்றிலிருந்து தூக்கிவீசப்படுவார் என்பதே எங்கள் கருத்தாகும். இன்று மக்கள் மத்தியில் ஆதரவோடு வாழ்பவர்கள் நாளை வரலாற்றில் காணாமல் போய்விடுவார்கள் முஸ்லிம்சமூகத்தை பதவிக்கும் பட்டத்துக்கும் விற்கதுவங்கினால் என்பதே வரலாறு காட்டிநிற்கும் உண்மையாகும்.
எம்.எச்.எம்.இப்றாஹிம்...
கல்முனை..