மாயக்­கல்லி மலையில் வெசாக் தினத்தில் பதற்ற நிலை ஏற்­ப­டலாம் : பாது­காப்பு வழங்­கவும்

வெசாக் தினத்தை முன்­னிட்டு இறக்­காமம் மாயக்­கல்லி மலைப்­ப­கு­திக்கு பக்தர்கள் அத்­து­மீறி பிர­வே­சித்தால் அங்கு பதற்ற நிலை­யொன்று ஏற்­படும் வாய்ப்பு இருக்­கின்­றது. எனவே, குறித்த பகு­தியில் சட்டம் ஒழுங்கை நிலை­நாட்டி பாது­காப்பை வழங்­கு­மாறு தமண பொலி­ஸா­ரிடம் இறக்­காமம் அனைத்து பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்­தினர் வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர். 

வெசாக் தினத்தை முன்­னிட்டு மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலை மற்றும் அதனைச் சூழ­வுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களில் பௌத்­தர்கள் அத்­து­மீறி பிர­வே­சிப்­பதால் ஏற்­படும் பாதக விளைவு குறித்து நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தமண பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இறக்­காமம் பிர­தே­சத்தின் அனைத்து பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னப்­பி­ர­தி­நி­திகள் ஏழு பேரே நேற்­றைய தினம் இவ்­வாறு முறைப்­பாட்டை தமண பொலிஸ் நிலை­யத்தில் பதிவு செய்­தனர்.

முஸ்­லிம்­களோ, சிங்­க­ள­வர்­களோ மாயக்­கல்லி மலையைச் சுற்­றி­யுள்ள காணி­க­ளுக்குள் பிர­வே­சிக்கக் கூடாது என நீதி­மன்றம் தடை­யுத்­த­ரவு பிறப்­பித்­தி­ருக்கும் நிலையில் குறித்த மலையில் வைக்­கப்­பட்­டுள்ள சிலையை நாடி பெரு­ம­ள­வி­லான சிங்­க­ள­வர்கள் இன்று வெசாக் தினத்தை முன்­னிட்டு வருகை தரலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் இப்­பி­ர­தேச முஸ்­லிம்கள் ஆத்­தி­ரப்­பட நேரி­டலாம். இவ்­வாறான அசா­தா­ரண சூழ்­நிலை ஏற்­ப­டாமல் தடுக்கும் முகமாகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என மாயக்கல்லி மலை விவகார அமைப்பின் செயலாளர் சட்டத்தணி எஸ்.எல்.பாறூக் சாஹிப் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -