போத்தலில் அடைக்கப்பட்ட நீரில் பாசிப்படிவு – ஒவ்வாமையால் மக்கள் விசனம்

எம்.ஐ.நெளசாத்-
ன்றைய காலகட்டத்தில் மக்கள் குடிநீருக்காக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையால் வழங்கப்படுகின்ற குழாய்நீர் மூலமாகவும், பயணங்களின் போது சுத்தமாக தயாரித்து போத்தலில் அடைக்கப்பட்ட நீரையும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். 

இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் சுத்தமான போத்தலில் அடைக்கப்பட்ட நீரை விநியோகம் செய்கின்ற நிறுவனங்கள் அதிகரித்து அவர்கள் தமக்குள் போட்டிச் சூழல் ஒன்றை உருவாக்கி இலகுவில் கொண்டு செல்லக்கூடிய அழகிய வடிவமைப்பை பயன்படுத்தி அரை லீற்றர் முதல் 20 லீற்றர் வரையான போத்தல்களில் அடைக்கப்பட்ட நீரினை வினியோகம் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் பிரீமியர் நிறுவனமானது வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு குறுகிய காலத்திலே சந்தைக்கு வந்து சுத்தமான குடிநீரை வழங்கி வருகின்றது. அதாவது ஆரம்ப காலத்தில் சந்தைக்குள் நுழையும் தரமான உற்பத்திகளை சந்தைக்கு வழங்குவது சந்தை நிலைத்திருப்புக்கு இன்றியமையாத ஒன்றாகும். அந்தவகையில் இப் பிரீமியர் நிறுவனத்தினால் கடந்த வாரம் அட்டாளைச்சேனைப் பகுதியில் 02 கடைகளில் அக்கரைப்பற்று விற்பனை முகவரால் விநியோகிக்கப்பட்ட 05 லீற்றர் பெறுமதியான போத்தலில் அடைக்கப்பட்ட நீர்போத்தலின் அடியில் பச்சை நிறத்திலான பாசிப்படிவுகள் காணப்படுகின்றது. இதனை கொள்வனவு செய்து சென்றவர்கள் எப்படி காலாவதியாக போத்தலில் அடைக்கப்பட்ட நீர் பாசி பிடிக்க முடியும் என கடைக்காரரிடம் முறைப்பாடு செய்து திருப்பிக் கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுச் சென்றுள்ளனர்.

இப்பிரீமியர் கம்பனியானது இலங்கை அரசின் SLS 894 அரச அங்கீகாரம் பெற்றுள்ளது, HACCP சுகாதாரத் தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. இன்னும் நீர் விநியோகத்திற்கான அரச அங்கீகாரம் பெற்ற ஓர் அமைப்பு ஆனால் 2017.10.26 ம் திகதியிடப்பட்ட போத்தலில் அடைக்கப்பட்ட நீரானது போத்தலினுள்ளேயே பாசி படிந்த நிலையில் காணப்படுகின்றமையை ஏற்கமுடியுமா? இதில் ஏதும் கலப்படம் இருக்கிறதா? என பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி கடை உரிமையாளரை வினவிய போது குறிப்பிட்ட அக்கரைப்பற்று விற்பனை முகவரிடமும், அவிசாவளை – புவக்பிட்டியவிலுள்ள பிரீமியர் கம்பனியிடமும் முறைப்பாடு செய்த போதிலும் அவர்கள் இது பற்றி கணக்குமெடுக்கவில்லை. ம்ம் பார்க்கிறோம் பார்க்கிறோம் என்று அலட்சியம் செய்வதாகவும் கூறினார்.

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வாமையால் நோய்கள் அதிகரித்து மக்கள் அல்லலுறும் நிலையில் இப்பிரீமியர் கம்பனியின் உற்பத்தி இவ்வாறு பாசிபடிந்து அதனை விற்பனைக்கு விடுவது சரியா? உரிய முறைப்பாடு கடைக்காரர்களால் செய்யப்பட்டும் அக்கரைப்பற்று முகவரும், பிரிமியர் கம்பனியும் இதை அலட்சியம் செய்வது ஏன்? 
இதன் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? இந்த கம்பயின் உற்பத்தி தரமில்லை என அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து உற்பத்தியை தடைசெய்வதுடன் அனுமதியை ரத்துச் செய்வதா? இல்லை அவர்களுடைய உற்பத்தியை மக்கள் கொள்வனவு செய்து வீணாக நோயை விலைகொடுத்து வாங்குவதா? 

'அநியாயம் செய்தாலும் - அதை சுட்டிக்காட்டியும் அதை திருத்திக்கொள்ளாமல் உதாசீனம் செய்தால் என்ன செய்வது?' 

Blue Water Premier (Pvt). Ltd, SirisandaEstate,. Puwakpitiya, Awissawella. Colombo, Hanwella. 0364923335. 0112796065. 

குறித்த நிறுவனத்திற்கு தொலைபேசி ஊடாக நாம் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -