எம்.ஜே.எம்.சஜீத்-
அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (9) அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இணைத்தலைவர்களான பிரதி அமைச்சர் பைசல் காசீம் மற்றும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஐ.எல். மாஹீர் உட்பட திணைக்களத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு முக்கிய பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.