இனவாதிகளை இனம்கான மறுக்கும் நமது சமூகம்...!

ண்மையான இனவாதிகளை இனம் கண்டிருந்தும், அவர்களுக்கு அடைக்கலமும் கொடுத்து, பட்டமும் பதவிகளும் கொடுத்து வைத்திருப்பவர்களை கண்டிப்பதற்கும் நமது முஸ்லிம் சமூகத்திலுள்ள சில சுயநல நோக்கம் கொண்ட புல்லுருவிகள் தயங்குவது ஏன்..?

மஹிந்தவுடைய ஆட்சியிலே முஸ்லிம்களுக்கு எதிரான சகல விடயங்களிலும் இனவாதத்தை கக்கியவரும், சொல்லாலும் செயலாலும் முஸ்லிம்களை இம்சித்து அறிக்கைகள் விட்டவருமான சம்பிக்க ரணவக்க என்பவர் இன்று எங்கே தஞ்சம் அடைந்துள்ளார் என்பதனையும், இவர் இன்றும் இனவாத நடவடிக்கைகளை சூசகமான முறையில் நிறைவேற்றிவருகின்றார் என்பதனையும், ஏன் நமது சமூகம் கண்டுகொள்ள மறுக்கின்றது.?

இவருக்கு உறிய மறியாதை கொடுத்து வைத்திருக்கும் ஐ.தே.கட்சியையும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவையும் இந்த முஸ்லிம் சமூக புல்லுருவிகள் கண்டிக்கத் தவறுவது ஏன்.?

இப்படிப்பட்ட குணங்களைக் கொண்ட சம்பிக்க ரணவக்கவின் தைரியத்தில்தான் கடந்த காலங்களில் ஞானசாரவும் அவரது கூட்டமும் முஸ்லிம்களை சொல்லொன்னா துயரங்களுக்கு ஆளாக்கியிருந்தனர்.

இனவாத குணங்களைக் கொண்ட சம்பிக்கவும், ஞானசாரவும் இன்று யாருடைய அரவணைப்பில் இருந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்துகொண்டும் அரசியல் காற்புணர்ச்சியின் காரணமாக அவர்களை கண்டிக்க தவறிவரும் இவர்களை என்னவென்று கூறுவது.

இன்று இந்த நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிஅவர்களை என்ன காரணத்துக்காக முஸ்லிம்கள் தெறிவுசெய்தார்களோ அந்த காரணத்தின் முக்கிய புள்ளியான ஞானசார தேரர் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது மட்டுமல்ல, அவருக்கு வடக்குகிழக்கின் தொல்பொருள் பாதுகாப்புக்குறிய முக்கிய பதவியும் வழங்கியுள்ளார், அதுமட்டுமல்ல அவரை நீங்கள் கைது செய்வதாக இருந்தால் என்னிடம் அனுமதி பெறவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இன்னும் ஒரு படி மேலே சென்று அவருடைய முக்கியஸ்தர் ஒருவருக்கு அண்மையிலே மஹியங்கனை சுதந்திரக்கட்சி அமைப்பாளர் பதவியும் கொடுத்து ஞானசாரவின் மேலுள்ள அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இப்படி நடந்து கொள்ளும் ஜனாதிபதியை கண்டிப்பதற்கு யாருக்கும் என்னம் இருப்பதாக தெறியவில்லை.

அந்த அதிகாரத்தை கையில்வைத்துக்கொண்டு இன்றும் வில்பத்து விடயம் தொடக்கம் மாயக்கல் சிலைவைப்புவரை அவருடைய ராச்சியம்தான் நடந்து கொண்டு வருகின்றது இதனை கூட இந்த காழ்ப்புணர்ச்சி கொண்ட புல்லுருவிகளுக்கு விளங்காமல் இருப்பதன் மர்மம் புரியாமல் உள்ளது.

அன்று மட்டக்களப்புக்கு வந்து நீதிமன்ற கட்டளையை பொலிசாரின் கண்முன்னாலயே கிழித்தெறிந்தார் அதனை யாரும் கண்டு கொண்டதாக தெறியவில்லை, அந்த அளவுக்கு ஜனாதிபதி மைத்திரி அவர்கள் அவருக்கு பாதுகாப்பும் அந்தஸ்த்தும் வழங்கியுள்ளார்.

அவருக்கு எதிராக இந்த நல்லாட்சியில் அஸாத்சாலி, முஜிவுர் ரஃமான், ரிசாட் பதியுதீன் போன்றோர் பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர் அதனைக் கூட விசாரணைக்கு எடுக்காமல் ஞானசாரவை காப்பாற்றி வைத்திருக்கும் இந்த ஜனாதிபதி மைத்திரி அவர்களை கண்டிக்க வக்கில்லாமல் இருக்கின்றார்கள் இந்த புல்லுருவிகள்.

அதே நேரம் தனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயத்துக்கு இந்த சம்பிக்க ரணவக்கதான் காரணம் என்றும் ஞானசாரவுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுக்க முற்பட்டபோதெல்லாம் இவர்தான் அதனை தடுத்தார் என்றும் மஹிந்த ராஜபக்ச பகிரங்கமாகவே கூறிவருகின்றார், இப்போது எனக்கு எதிராக முஸ்லிம்களை திருப்பிவிட்டு எங்கே தஞ்சம் அடைந்துள்ளார் இந்த சம்பிக்க பாருங்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு முன்னால் ஜனாதிபதியாக இருந்தவர் மட்டுமல்ல இன்று பெரும்பாண்மை மக்களின் கதாநாயகனாகவும் இருந்துவருகின்ற, இனிமேல் அரசியலில் அவரை ஒதுக்கிவிட்டு எதுவும் செய்யமுடியாத நிலையிலுள்ள ஒருவர் முஸ்லிம்களுக்கு நடந்த விடயங்களுக்கு வருத்தம் தெறித்துள்ளது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும்.

பிரதமர் ரணில் அவர்களோ, ஜனாதிபதி மைத்திரி அவர்களோ இந்த இனவாதிகளை பகிரங்கமாக கண்டித்த வரலாறு கிடையாது, இப்படிப்பட்ட இனவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளவர்கள் நல்லவர்களாகவும், ஆனால் தான் செய்த தவறை பகிரங்கமாக ஒத்துக்கொண்டுள்ள மஹிந்த என்பவர் இவர்களின் பார்வையில் கெட்டவராகவும் சித்தரிக்கப்படுகின்றார்.

இது மேற்குலகினதும், டயஸ் போராக்களினதும் சதியினால் நடக்கும் விடயம் என்பதை நமது முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ளவேண்டும், பெரும்பாண்மை மக்களின் கூடுதல் ஆதரவை பெற்றுவரும் ஒரு தலைவனை நாமும் ஏற்றுக்கொண்டு செல்வது எதிர்காலத்தில் நமது சமூகத்துக்கு ஆரோக்கியமான விடயமாக இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இன்று மைத்திரியாக இருந்தாலும் சரிதான் ரணிலாக இருந்தாலும் சரிதான் அவர்களுக்கு கட்சி சார்பான செல்வாக்குத்தான் உண்டே தவிற, தனிப்பட்ட அரசியல் செல்வாக்கு இல்லாதவர்களாகத்தான் இன்றும் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் மஹிந்தவை பொறுத்தவரை அப்படியல்ல, அவர் தனிமனித செல்வாக்கோடு உயர்ந்துவருபவர், அவரை எதிர்வரும் காலங்களில் யாரும் இலேசாக ஒதுக்கிவைத்துவிட முடியாது, இதனை முஸ்லிம் சமூகம் கவணத்தில் கொண்டு செயல்பட்டால்தான் நமது சமூகம் எதிர்காலத்தில் வெற்றியடைந்த சமூகமாக மாறும், இல்லாது விட்டால் தமிழ் சமூகத்தைப்போல் நாமும் பாதிப்படைவோம் என்பதையும் நாம் கவணத்தில் எடுக்கவேண்டும் என்பதே எங்கள் கருத்தாகும்.

ஆகவே, உண்மையான இனவாதிகள் எங்கே தஞ்சம் அடைந்துள்ளார்கள், அவர்களை பின்னாலிருந்து தட்டிக்கொடுத்து வளர்ப்பவர்கள் யார் என்பதையும் காழ்ப்புணர்ச்சிகளை ஒருபக்கம் ஒதுக்கிவைத்துவிட்டு புரிந்துகொண்டு நாம் நடக்கவேண்டும் என்பதே உண்மையாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -