அதாவுல்லாஹ்வை வைத்து பசில் ஆட்டம் காட்டினார் - பைசர் முஸ்தபா

ள்ளூராட்சி மன்றத் தேர்தல் சீர்திருத்தச் சட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவை வைத்துக் கொண்டு பசில் ராஜபக்ச ஆட்டம் காட்டியிருப்பதாக பைசர் முஸ்தபா விமர்சித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பது குறித்து நேற்றைய தினம் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, இரண்டு வாரங்களுக்குள் உள்ளூராட்சித் தேர்தல்கள் சீர்திருத்த சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதாக நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்தார்.

எனினும் இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன், இது தொடர்பாக பல்வேறு தடவைகள் நாடாளுமன்றத்தின் கவனம் ஈர்க்கப்படும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.மரிக்கார், தேர்தல்களை ஒத்திப்போடுவதற்காக மட்டும் தான் அமைச்சர் இருக்கின்றாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவின் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போது சிறுபான்மைக் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருப்பதாகவும், அவர்களின் இணக்கம் இன்றி தேர்தல் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படாது என்றும் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே குறைந்த பட்சம் எந்தக் காலகட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறக் கூடும் என்பது குறித்தாவது அமைச்சர் பைசர் முஸ்தபா பதிலளிக்க முடியுமா என்று டளஸ் அலகப்பெரும கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் பைசர் முஸ்தபா, கடந்த அரசாங்கத்தில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சராக டளஸ் அலகப்பெரும செயற்பட்டிருந்தால் இந்தப் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. ஏனெனில் டளஸ் நேர்மையாக செயற்பட்டிருப்பார்.

ஆனால் கடந்த அரசாங்கத்தில் அமைச்சர் அதாவுல்லாவை பெயரளவுக்கு உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சராக வைத்துக் கொண்டு, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபசக்சவே அனைத்தையும் ஆட்டுவித்திருந்தார். அதன் காரணமாக சிறுபான்மை மக்களுக்கு அநீதியான முறையில் இந்த திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிலும் ஏ.சி. அறைகளில் இருந்து கொண்டு, பொதுமக்களின் கருத்துக்களை கேட்கவோ, பொது மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கவோ, சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதிக்கும் வகையிலோ இந்த திருத்தச் சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கவில்லை.

அதன் காரணமாகவே தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை மாற்றியமைப்பதற்காக நான் முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன் என அமைச்சர் பைசர் முஸ்தபா பதிலளித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -