ஏ.எஸ்.ஹஸ்பர்-
திருகோணமலை தி/ வான்எல புஹாரி மஹாவித்தியாலயத்தில் நீண்ட நாட்களாக ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக பெற்றார்கள் தெரிவிக்கின்றனர்கள்.கணிதம்,விஞ்ஞானம்,தமிழ்,உளவளத்துனை போன்ற பாடங்களுக்கே மிக நீண்ட நாட்களாக ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது இப்பிரச்சினை தொடர்பாக கடந்த பல நாட்களாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கொண்டு சென்றும் இது வரை அவ்விடயத்தில் கரிசனை காட்டாமல் பொடுபோக்காக இருக்கின்றார்கள் இதனால் தங்கள் பிள்ளைகளின் கல்வி நிலை பாதிப்படைவதாகவூம் தெரிவிக்கின்றனர்.சுமார் 438 மாணவர்கள் கல்விபயில்கின்றமையும் உயர்தரப் பிரிவும் காணப்படுகின்றன.குறிப்பாக முக்கியமான பாடங்களுக்கே ஆசிரியர்கள் பற்றாக்குறைவாக உள்ளனர் இதனால் பிள்ளைகளின் சாதாரண தரப் பெறுபேறுகளிலும் பரீட்சை பெறுபேறுகளிலும் மோசமான நிலை ஏற்படலாம் எனவும் அச்சம் கொள்கின்றனர்கள் .எனவே இவ்விடயம் தொடர்பாக ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க துரித நடவடிக்கை எடுக்குமாறும் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட தரப்புகளை கேட்டு நிற்கின்றது.
திருகோணமலை மாவட்ட கிண்ணியாவில் உள்ள மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு விசேடமாக இதனை கொண்டுவருகிறோம்.