மியன்மார் அகதிகளை சிறையில் பார்வையிட்ட யாழ் கிளிநொச்சி மாவட்ட உலமா சபை.!

பாறுக் ஷிஹான்-
லங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு தற்போது விளக்கமறியலில் உள்ள மியன்மார் அகதிகளை யாழ் கிளிநொச்சி மாவட்ட உலமா சபை தலைவர் மௌலவி பி எஸ் சுபியான் தலைமையிலான குழுவினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) யாழ் காங்கேசன் துறை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்த 30 மியன்மார் அகதிகள் நாளை (2) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தற்போது யாழ்ப்பாணம் பிரதான சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு அங்குள்ள இரு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இதனை அடுத்து அங்கு சென்ற மௌலவி பி எஸ் சுபியான் மற்றும் யாழ் கிளிநொச்சி மாவட்ட உலமா சபையின் சமூக சேவை பொறுப்பாளர் மௌலவி இர்பான் சமூக நல்லிணக்கத்திற்கு பொறுப்பான மௌலவி பாஹீம் ஆகியோர் இணைந்து சிறைச்சாலை அத்தியட்சகரின் அனுமதியுடன் மியன்மார் மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை கேட்டு செய்வதற்குரிய ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தவிர யாழ் கிளிநொச்சி மாவட்ட உலமா சபை யாழில் உள்ள உதவ ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டத்தை பள்ளிவாசல் ஒன்றில் நடாத்தவுள்ளதாகவும் மியன்மார் அகதிகள் குறித்து நீதிமன்றத்தில் நாளை (2) நடைபெறும் வழக்கு விடயங்களில் சட்ட நடவடிக்கைகளுக்காக சிரேஸ்ட சட்டத்தரணிகளின் ஆலோசனைகளை பெற்றுள்ளதாகவும் அதன் அடிப்படையில் அவ்வகதிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சகல வழிகளிலும் முன்னெடுக்க உள்ளதாக யாழ் கிளிநொச்சி மாவட்ட உலமா சபை தலைவர் மௌலவி பி எஸ் சுபியான் குறிப்பிட்டார்.

மேலும் மியன்மார் அகதிகளுக்கு உதவுவதாக கூறிக்கொண்டு சில அடையாளம் தெரியாத நபர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் தகவல்களை பரப்பி நிதிசேகரிக்க முயற்சிப்பதாகவும் இப்பகுதியில் உள்ள தனிப்பட்ட நபர்கள் வைத்துள்ள முகவரியற்ற அமைப்புக்கள் மக்களால் அங்கீகரிக்கப்படாத சில நபர்கள் குறித்த மியன்மார் அகதிகளிற்கு தங்கள் ஊடாக உதவிகளை பெற சமூக ஊடகங்களை நாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இது குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுக்கொண்டார்.

அத்துடன் சில தனியார் நிறுவனங்களும் தனவந்தர்களும் மியன்மார் அகதிகளுக்கு உதவிகளை வழங்கியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -