மோடி இலங்கை முஸ்லிம்களுடன் மோதப் போகுறாரா..?

ந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வரவுள்ளதன் நிமித்தம் வரலாற்றில் என்றுமில்லாதவாறு அவருக்கு உச்ச பாதுகாப்புக்கள் வழங்கப்படவுள்ளமையானது இவ்வாட்சியை நிறுவுவதில் இந்தியா முக்கிய வகிபாகம் வகித்ததை பறைசாற்றி நிற்கின்றது. இது கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இந்திய உளவுத் துறை அமைப்பான றோவிடமிருந்து பணம் வாங்கியாதாக அட்டாளைச்சேனையின் முன்னாள் தவிசாளர் அன்சில் கூறிய விடயங்களையும் உறுதி செய்கிறது.

திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்கவுள்ளதான செய்திகளும் எதிர்ப்புக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்ற சூழ் நிலையில் இலங்கை நாட்டுக்கு பாதிப்பாக அமையக் கூடிய வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றிய பேச்சுக்களும் சம காலத்தில் சென்று கொண்டிருக்கின்றன. இந் நேரத்தில் இந்திய பிரதமரின் வருகை இலங்கையில் மிகவும் சர்ச்சைக்குரியதாக அமையும் என்பது யாவரும் அறிந்ததே! 

இவற்றையெல்லாம் கவனத்திற் கொள்ளாதே இந்திய பிரதமர் இலங்கை வருகை தரவுள்ளார். அதிலும் இந்திய பிரதமர் மோடி ஒரு நாள் மாத்திரமே இலங்கை வர உத்தேசித்துள்ளார். இவரின் நேர சுருக்கம் தற் காலத்து விமர்சனங்களை கவனத்தில் கொள்ளாத வருகையின் பின்னால் மிக முக்கிய விடயங்கள் அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. மோடியின் வருகை இலங்கை நாட்டின் தேசிய பாதுகாப்பு, வளர்ச்சிக்கும் சவால் விடுப்பதாக ஏற்கனவே விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

இவரின் வருகை இலங்கை நாட்டின் தேசிய விடயங்களுக்கு சவால் விடுப்பதோடு இவரின் வருகையில் இலங்கை முஸ்லிம்களும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். மிக விரைவில் அரசியலமைப்பு மாற்றம் வரலாம் என நம்பப்படும் நிலையில் இதில் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதில் இந்தியா அதிக விருப்பம் கொண்டுள்ளது. தற்போதைய விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதற்கான அழுத்தங்களை வழங்கலாம். இதனூடாக இலங்கையின் மிக முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவது அவர்களது நோக்கங்களில் ஒன்று என்பதை முஸ்லிம்கள் மனதில் பதித்து மோடியின் வருகையை நோக்க வேண்டும். அவர்களின் தேவை எதுவாக இருந்தாலும் பாதிக்கப்படப் போவது இலங்கை முஸ்லிம்களாகும். இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கத்தை அதிகரிக்க கடல் வழிப் பாதைகள் கூட சிந்திக்கப்படுகின்றன.

இந்திய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூலம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றின் பின்னால் மோடி ஒளிந்துள்ளார் என்பதை நான் இங்கு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. இலங்கையில் இந்தியாவின் சிவசேனா அமைப்பு மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைபிணை ஒத்த செயற்பாடுகளை அகில இலங்கை இந்து மாமன்றம் இலங்கையில் முன்னெடுக்கின்றன. அகில இலங்கை இந்து மாமன்றத்துக்கும் பொது பல சேனாவுக்கும் இடையில் மிக நெருங்கிய பகிரங்கமான தொடர்புள்ளது. இவற்றினையெல்லாம் வைத்து சிந்திக்கின்ற போது பொது பல சேனாவின் ஆட்டங்களுக்கு பின்னால் தற்போதைய இந்திய அரசின் அனுசரணை இருக்கலாம் என்பதை அறிந்துகொள்ளலாம்.

இவ்வாட்சியை கவிழ்க்க இந்திய அரசு அதிக பிரயத்தனங்களை எடுத்தமை வெள்ளிமடை. அதே போன்று இவ்வாட்சி கவிழ முஸ்லிம்களின் மஹிந்தவுக்கு எதிரான ஒருமித்த பயணம் இருந்தமை மறுதலிக்க முடியாத உண்மை.முஸ்லிம்களை மஹிந்தவிடமிருந்து பிரிக்க பொது பல சேனாவின் செயற்பாடே காரணமாக இருந்தது.இவற்றினை வைத்து சிந்திக்கின்ற போது பொது பல சேனாவின் பின்னால் இந்திய நாட்டின் அனுசரணை இருக்கலாம் என்பதை ஊகிக்க முடிகிறது.

இந்தியாவில் மோடியின் அனுசரணை பெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பினூடாக முஸ்லிம்களுக்கு எதிரான விரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கையிலும் ஒரு போதுமில்லாதவாறு முன்னரை விட முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகம் முன்னெடுக்கப்படுகின்றன. இதனுடன் இந்திய இலங்கை உறவு போன்றவற்றை வைத்து சிந்திக்கும் போது இலங்கையில் நடைபெறும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளின் பின்னணியில் இந்திய அரசு பங்காற்றலாம் என்ற அச்சம் எழுகிறது.

எனவே,மோடியின் வருகையானது இலங்கை முஸ்லிம்களை பல வழிகளில் பாதிக்கும் என்பதே நிதர்சன உண்மையாகும்.
அ.அஹமட்
(joint opposition tamil media unit director)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -