முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் இறுதி நிகழ்வுகள்.!

நேற்று முன்தினம் கொழும்பில் காலமான பிரபல சட்டத்தரணியும், மனித உரிமைவாதியும், தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் இறுதி நிகழ்வுகள் இன்று யாழ். கொக்குவிலில் இடம்பெற்றது. அவரது பூதவுடல் கொழும்பு ஜெயரட்ண மலர்ச்சாலையில் நேற்றையதினம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நேற்று மாலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி எடுத்துவரப்பட்டது. இன்று (30.05.2017) செவ்வாய்க்கிழமை காலை 7மணிமுதல் 8.30வரை சாவகச்சேரியில் அவரது பூதவுடல் அப்பிரதேச மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அங்கிருந்து கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. 

இறுதிக் கிரியைகள் இன்று நண்பகல் 12மணிமுதல் நடைபெற்று பிற்பகல் 2.30மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் தகனக் கிரியைககள் இடம்பெற்றன. அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் இறுதிக் கிரியைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிறேமச்சந்திரன், என்.சிறீகாந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, வட மாகாணசபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், சுகிர்தன், சயந்தன், பரஞ்சோதி, ஆர்னோல்ட், சர்வேஸ்வரன் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராஜா, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வட மாகாண அமைச்சர் குருகுலராஜா, தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகன், யாழ். உயர்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, கிழக்கு மாகாண அமைச்சர் துரைராசிங்கம் மற்றும் பெருந்தொகையான மக்களும் கலந்துகொண்டனர்.









எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -