எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் பிரதி அமைச்சர் அமீர் அலியின் பக்கத்திலிருந்து ஹலால்தீன்.!

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பிரும், கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவனும், கல்குடாவின் அரசியல் தலைமையான பிரதி அமைச்சர் அமீர் அலியின் மிக முக்கியமான விசுவாசியுமான அல்-ஹாஜ் மீராஷாஹிப் ஹலால்தீன் எதிர்வருகின்ற மாகாண சபை தேர்தலில் கல்குடா தொகுதியிலிருந்து பிரதி அமைச்சர் அமீர் அலீயின் தெரிவாகவும், கல்குடாவின் மாகாண பிரதி நிதித்துவத்தினை காப்பாற்றுவதற்காகவும் களமிறக்கப்படலாம் என பரவலாக பல முனைகளிலிருந்தும் பேசப்பட்டுவருகின்றது. 

ஹலால்தீனை எடுத்துக்கொண்டால் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் பலர் இருந்தும் அதில் மிகவும் முக்கியமானவர் என்பது ஹலால்தீன் பிரதி அமைச்சர் அமீர் அலியுடன் பல வருடங்களாக அவருடைய அரசியல் முன்னெடுப்புக்களில் தோலோடு தோல் நின்று நம்பிக்கைக்கு பாத்திரமாக உழைத்து வருகின்றமை குறிப்பிட்டு கூறக்கூடிய எவராலும் மறுதளிக்க முடியாத விடயமாக கல்குடா மக்களால் பார்க்கப்படுகின்றது. இந்த நிலையிலே ஹலால்தீன் பிரதி அமைச்சர் அமீர் அலியின் நம்பிக்கைக்கு பாத்திராமக வருகின்ற மாகாண சபை தேர்தலில் களமிறக்கப்படலாம் என்பது ஒரு எதிர்வு கூறப்பட்டு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விடயம் என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது என்பது முக்கியமான செய்தியாகும். எது எவ்வாறாக இருந்தாலும் எமது கல்குடா மண்ணுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலியின் ஆசீர்வாதத்துடன் கிடைக்கவுள்ள புதிய மாகாண சபை உறுப்பினர் ஹலால்தீனுக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -