பாறுக் ஷிஹான்-
வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து அய்யூப் அஸ்மினை மீளழைத்து அவ்விடத்திற்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மற்றொருவரை நியமிக்க தீர்மானித்துள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இத்தீர்மானம் தொடர்பில் தனக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து அஸ்மினைத் தொடர்புகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த மாகாண சபை உறுப்பினரை அழைத்து தான் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை மீள அழைப்பதற்கான இறுதி முடிவெடுத்து ஊடகங்களுக்கு அறிக்கையாக அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் தனக்கு எதுவும் தெரியாது என அவரால் (மாகாண சபை உறுப்பினரால்) குறிப்பிடப்பட்டிருப்பதும் கட்சி தான் இறுதி முடிவு செய்ய வேண்டும் என கூறி வருவதும் எந்த கட்சியில் தான் இருக்கின்றேன் என்கின்ற நிலைக்கு தடுமாறி அவர் கதைப்பதாக சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகத்தில் நபர் ஒருவர் வட மாகாண சபை வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிற்கு வரியற்ற வாகன இறக்குமதிக்கான சலுகை தற்போது கிடைத்துள்ளதை அடுத்து குறித்த மாகாண சபை உறுப்பினர் இவ்வாறு நாடகமாடுவதாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தவிர தனது பதவியை தக்க வைப்பதற்காக அண்மைக்காலமாக தமிழ் முஸ்லீம் உறவுஇவடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக கருத்துக்களை முன்வைத்தும் தனது சில அல்லைக்கைகளின் மூலம் ஊடகங்கள் சிலவற்றுக்கும் மீளழைப்பு விடயம் வெளிவரவே அதை மறுத்து செய்திகளை அனுப்பியும் மக்களின் அனுதாபத்தை பெற முனைப்பு காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.