கிழக்கு மாகாண ஹாபிழ்களை கௌரவிக்கும் விதமாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள ஹாபிழ்களுக்கான மன்னப்போட்டி நிகழ்வின் திருகோணமலை மாவட்டத்திற்கான போட்டிகள் இன்று மூதூர் நத்வதுல் உலூம் அரபுக்கல்லூரியில் இடம்பெற்றன.
கிழக்கு மாகாண ஹாபிழ்கள் ஒன்றியத்தின் தலைவரான முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தபோட்டி நிகழ்வுகளில் இன்றைய நிகழ்விற்கு திருகோணமலை மாவட்ட உலமாக்கள் மற்றும் ஹாபிழ்கள் பலர் கலந்துகொண்டனர். இன்றைய நிகழ்வின் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பிர் ஆர் எம் அன்வரும் கலந்துகொண்டார்.
இதன்போது முற்பகல் வேளையில் ஹாபிழ்களுக்கான மன்னப்போட்டிகள் இடம்பெற்றதுடன் பிற்பகல் வேளையில் ஹாபிழாக்களுக்கான மன்னப் போட்டிகள் இடம்பெற்றன. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மன்ன்னப் போட்டி நிகழ்வுகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது,
இந்நிகழ்வுகளில் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைபெறும் அல்-ஹாபிழ் ஒருவருக்கு 500.000 பணப்பரிசும் இரண்டாம் இடத்துக்கு 300.000 பணப்பரிசும், மூன்றாம் இடத்தைப்பெறும் ஹாபிழுக்கு 200.000 பணப்பரிசும் வழங்கப்படவுள்ளதுடன் கலந்து கொள்ளும் அனைத்து அல்-ஹாபிழ்களுக்கும் பெறுமதி மிக்க அன்பளிப்புக்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.