பாறுக் ஷிஹான்-
யுத்தத்தில் உயிர்நீத்த படை வீரர்களின் நினைவுதினம் யாழ் பலாலி படைத் தலைமையகத்தில் இன்று (8) காலை அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பிரதம விருந்தினராக கலந்துகொண்டு பலாலி படைத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
அத்துடன் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்கள் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடற்படை தளபதி வடக்கு மாகாண பிரதேச செயலாளர்கள் மதகுருமார்கள் ஆளுநரின் செயலாளர் முப்படையினர் என பெருமளவானோர் கலந்துகொண்டு நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.