இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையம் கடந்த மூன்று ஆண்டுகளாக நடாத்திவரும் இலங்கை மக்கள் அரங்க - நாடக செயற்திட்டத்தின் நான்காவது கட்டம், மே மாதம் தொடக்கம் வட மாகாணத்தில் ஆரம்பமாகவுள்ளது. இளம் தலைமுறையினரிடத்தில் பன்மைத்துவம், சகிப்புத்தன்மை, வித்தியாசங்களை மதித்தல் மற்றும் அகிம்சையை ஊக்குவித்தல் என்பன இம்முறை மக்கள் அரங்கச் செயற்திட்டத்தின் நோக்கங்களாகும்.
முற்றிலும் இலவசமாக இடம்பெறவுள்ள இத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்படும் மக்கள் அரங்க நாடகக் கலைஞர்கள் மற்றும் கலைக் குழுக்கள் என்பனவற்றுக்கான நிபுணத்துவ மக்களரங்க ஆற்றுகை தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.
யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள், கலைக்குழுக்கள் என்பன இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக் காலத்தில் மக்கள் அரங்க ஆற்றுகையை சமூக மாற்றத்திற்குப் பயன்படுத்தும் முறைகள் தொடர்பில் பயிற்சி வழிகாட்டல் நூல் ஒன்றையும் இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையம் வெளியிடவுள்ளது. இதற்காக கலைக்கழகங்கள் துறைசார் நிபுணர்கள், பயிற்றுவிப்பாளர்கள், பல்கலைக்கழகத்தினர் ஆகியோரின் வழிகாட்டல்களை ஊடக நிலையம் பெற்றுக்கொள்ள உள்ளது.
சுமார் பத்து வார இறுதி நாட்களில் இடம்பெற உள்ள 10 நாள் பயிற்சிகளைத் தொடர்ந்து 40 மக்கள் அரங்குகள் இடம்பெற உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 மக்கள் அரங்க நாடகங்கள் வீதம் அரங்கேற்றப்படும். இதில் கலந்து கொள்ள விரும்பும் கலைஞர்கள் கலைக்குழுக்கள் எதிர்வரும் மே மாதம் 20 ம் திகதிக்கு முன்னர் iகெழளூடுனுதுகு.ழசப எனும் மின்அஞ்சலுக்கு விண்ணப்பிக்கலாம்.
தொலைபேசி இலக்கம்: 0776653694 (அஸ்ஜைன்)