சற்சொரூபவதி நாதனின் மறைவு, ஊடகத்துறைக்கு ஒரு பாரிய வெற்றிடமாகும்

சிரேஷ்ட ஊடகவியலாளர் செல்வி சற்சொரூபவதி நாதன் அவர்களின் மறைவு அறிந்து மிகுந்த வேதனை உற்றேன். அன்னாரது மறைவின் மூலம் முதிர்;ந்த அனுபவம் மிக்க ஒரு ஊடகவியலாளர் இல்லாது இருப்பது அத்துறைக்கு ஒரு பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்வி நாதன் அவர்கள் ஏறத்தாழ நான்கு தசாப்தங்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தானம், நாழிதழ்கள் என்பவற்றில் தமது ஊடக ஆளுமையை வெளிப்படுத்திய திறமை மிக்கவராவர்.தமிழகத்தின் விஞ்ஞானத்துறை பட்டதாரியான செல்வி நாதன் இளமையிலிருந்தே பல்துறை ஆர்வமிக்கவராக இருந்தமையினால் நாடகம், ஒலிபரப்பு, செய்திகளைத் தொகுத்து வாசித்தல், பேச்சாற்றல் போன்ற விடயங்களில் தனது திறமையை நிரூபித்திருந்தார்.

அவரது சிறப்பு என்ன வென்றால் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சிறந்த சொல்வல்லமையோடு நிகழ்ச்சிகளைத் தொகுத்து அளிக்கும் ஆற்றல் என்றால் மிகையாகாது மற்றும் அவரது செய்தி வாசிப்பிற்காகவே இலங்கை வானொலி நேயர்கள் மிகுந்த விருப்பத்தோடு செவிமடுப்பதுண்டு.

செல்வி நாதன் அவர்கள் நான் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பணிப்பாளராக இருந்த காலம் முதல் எமது திணைக்களத்தோடு நெருங்கிய உறவினைக் கொண்டிருந்தார். அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாது பங்கு கொள்வதுடன் தமது ஆலோசனைகள், கருத்துக்களைத் தெரிவித்து ஊக்கமுட்டியவர்.

குறிப்பாகக் கூறுவதென்றால் அமரர் கௌரவ தி. மகேஸ்வரன் அவர்கள் இந்து சமய இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்ற 2வது உலக இந்து மாநாடு தொடர்பாகப் பிரதான பொறுப்பு ஒன்றினை ஏற்று மாநாடு சிறப்புற தனது பங்களிப்பினை நல்கினார். மேலும் திணைக்களத்தினால் நடத்தப்படும் இந்து சமய ஆயவரங்குகள், அருள் நெறிவிழாக்கள், சாகித்தியவிழாக்களை, அறநெறிக் கருத்தரங்குகள் சிறந்த முறையில் நடைபெற தகவல்களைச் சேகரித்து தொகுத்து வழங்கி உள்ளார்.

எல்லோருடனும் சிரித்த முகத்தோடு அன்பாகப் பழகக் கூடிய பண்பினைக் கொண்டுள்ள இவர் கொழும்பு இந்து மகளிர் மன்றம், கொழும்பு தமிழ் சங்கம் ஆகியவற்றிலும் அங்கத்துவம் வகித்ததுடன் பல ஆக்கபூர்வமான பணிகள் பல மேற்கொண்டு பலரின் பராட்டுகளையும் மெச்சுதல்களையும் பெற்றுள்ளார்.

பல்துறை ஆற்றல்மிக்க ஊடகத்துறையில் தராகையாக மிளிர்ந்து பெண்ணினத்திற்கு பெருமை தேடிதந்த செல்விநாதன் போன்றோர் அமைவது கிடைத்ததற்கரிய பேறு ஆகும்.

அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

சாந்தி நாவுக்கரசன்
செயலாளர்
புனர்வாழ்வு, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -