மோடியின் மலையக வருகை: நிலைமைகளை ஆராய இந்திய உயர்ஸ்தானிகர் வருகை

க.கிஷாந்தன்-
ந்தியா அரசாங்கத்தின் நிதி உதவில் நவீன வசதிகளுடன் டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தை திறந்து வைப்பதற்காக எதிர்வரும் 12ம் திகதி மலையகத்திற்கு இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி வருகை தரவுள்ளார்.

இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் முன்னேற்பாடுகளை ஆராய்வதற்காகவும், இந்திய உயர்ஸ்தானிகர் த ரஞ்சித் சிங் சந்து மற்றும் இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகள் 10.05.2017 அன்று காலை 11.00 மணியளவில் இந்திய உலங்கு வானூர்தி மூலம் அட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் தரையிறங்கினார்கள்.

இவர்களை ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய உறுப்பினர்களான கணபதி கணகராஜ், சத்திவேல், பிலிப்குமார் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் வரவேற்றனர்.

அத்தோடு இந்திய உயர்ஸ்தானிகருடன், இந்திய பொலிஸ் பாதுகாப்பு துறையின் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட அதியூயர் பாதுகாப்பு குழுவினர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு சென்று அங்கு நரேந்திர மோடியினை வரவேற்பதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் பாதுகாப்பு நிலவரங்கள் போன்றன அவதானித்தனர். இதன்போது யாழ்ப்பாண இந்திய தூதரக உதவி தூதுவர் ஏ.நடராஜன் கலந்துக் கொண்டார்.

அதனை தொடர்ந்து இந்திய பிரதமர் பொது மக்களை சந்திக்கவுள்ள நோர்வூட் விளையாட்டு மைதானத்தினையும் பார்வையிட்டு அங்குள்ள நிலவரங்களையும் ஆராய்ந்தனர்.

150 கட்டல்கள் உட்பட 6 சத்திர சிகிச்சை நிலையங்கள், 3 அவசர சிகிச்சை பிரிவு, மின்தூக்கி வசதிகள் உட்பட பல வசதிகள் இக்கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள டிக்கோயா வைத்தியசாலையின் பதிய கட்டடம் எதிர்வரும் 12 திகதி இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்படவுள்ளன.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -