இனவாதத்தின் தந்தை சம்பிக்க ரணவக்க ஐக்கிய தேசிய கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு ஆபத்தானது !



பொதுபல சேனாவின் தந்தையான சம்பிக்க ரணவக்க ஐக்கிய தேசிய கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பதுமுஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தானது என பானதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான்குறிப்பிட்டுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது..

இந்த நாட்டில் ஹலால் புர்கா இஸ்லாமிய தீவிரவாதம் உள்ளிட்ட இனவாத விஷத்தை மக்கள் மனதில் விதைக்க முழுக்காரணமாக இருந்த சம்பிக்க ரணவக்க ஐக்கிய தேசிய கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது தொடர்பில் நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

கடந்த மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் எம் சமூகத்துக்கு எதிராக கடும் விஷம கருத்துக்களை விதைத்தவர் சம்பிக்கரனவக்க.அப்போது எமது சமூகம் மீது சேற்றை வாரி இறைத்தவர் இப்போது ஒரேயடியாக மௌனித்துபோயுள்ளார்.இவரது மௌனத்தின் பின்னணியில் ஆயிரம் சூழ்ச்சிக்கள் உள்ளன.

தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் சகல விடயங்களுக்கும் பின்னால் அரசாங்கத்தின் பங்காளிகளான இனவாதிகளே உள்ளனர்.தங்களுக்கு அதிகாரம் கிடைக்கும் வரை மௌனமாக இருந்தவர்கள் இன்று அதிகாரத்தில் இருந்துகொண்டு வேலையை காட்ட ஆரம்பித்துள்ளனர்.

இந்த இனவாதிகளே இன்று ஐக்கிய தேசிய கட்சியில் முக்கியஸ்தர்களாக உள்ளனர்.தங்களிடம் இனவாதம் இல்லை என மார்த்தட்டிக்கொண்ட ஐக்கிய தேசிய கட்சி இன்று இனவாதத்தின் தந்தையும் பொதுபல சேனாவின் கோட்பாதருமாகிய சம்பிக்கவை மே தின கூட்ட மேடையில் முன் வரிசையில் வைத்து அழகு பார்க்கிறது.

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வேண்டும் என்ற கணவில் காய் நகர்த்தும் சம்பிக்க சிறுபான்மை மக்களை கவரும்நோக்கிலே இனவாதத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு தற்போது ஐக்கிய தேசிய கட்சியில் குடி புகுந்துள்ளார்.இவர்போன்றவகள் அமரும் மேடையில் அமர கபீர் ஹசீம் , ஹலீம் போன்றவர்கள் வெட்கப்படவேண்டும்.

சம்பிக்க ரணவக்க தொடர்பில் இந்தியாவுடன் கூட்டு வைத்திருக்கும் ரனில் தொடர்பிலும் முஸ்லிம்கள் மிக்கஅவதானத்துடன் செயற்படவேண்டும் என இபாஸ் நபுஹான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -