தேசியப்பட்டியலுக்காக முஸ்லீம்களை விற்பனை செய்த வடமாகாணசபை உறுப்பினர்

Fahmy Mohamed-

தேசியப்பட்டியலுக்காக முஸ்லீம்களை விற்பனை செய்த வடமாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் பதவிநீக்கம் என்ற NFGGன் ஊடக அறிக்கை அறிவுபூர்வமாக இருந்தாலும்,நமது சமூகத்தை பதவிக்காக தமிழ்தேசியக் கூட்டமைப்பிடன் அடகுவைத்தமைக்கான காரணம் தெளிவுபடுத்தப்படவில்லை.

முஸ்லீம்களின் பாதுகாப்பு , மீள்குடியேற்றம்,தொழில்வாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரப்பங்கீடு தொடர்பில் முஸ்லீம்களுக்கு விடுதலைப் புலிகளுடன்கூட்டு சேர்ந்து துரோகம் செய்தவர்கள்.வெட்கம் இல்லாமல் இதுவரை எதுவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் முஸ்லீம்கள் நம்பிக்கையை உருவாக்காமல் மௌனமாக இருப்பவர்கள்.இவர்களுடன் நீங்கள் பேசிய விடயம் என்ன?இதுவரை வடமாகாண முஸ்லீம்கள் தொடர்பில் நீங்கள் சாதித்தது என்ன??NFGGன் சிலர் வெளிநாட்டு தமிழ் அமைப்புகளின் கைபொம்மைகளாக உள்ளனர்.இருந்தும் Siraj போன்ற சிறந்த ஆளுமைமிக்கவர்கள் இவர்களின் செயற்பாடுகளை எந்தளவிற்கு ஏற்றுள்ளர்கள் என்பதுதான் கேள்விக்குறி.

1-கடந்த மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னரான உங்கள் பொதுவாழ்வில்,சுமார் 10 வருடங்களுக்கு மேலாக அடித்துத் துரத்தப்பட்ட வடமாகாண முஸ்லீம்களின் இனச்சுத்திகரிப்பு தொடர்பில் எந்தச் சந்தரப்பத்திலாவது மூச்சுவிட்டீர்களா?

2-மாகாணசபையில் போனஸ் ஆசனம் பெற்று தலையாட்டும் பொம்மையாக இருக்கின்றீர்கள். நீங்கள் வடமாகாண முஸ்லீம்கள் தொடர்பில் 68 தடவைக்கு மேலாக கூடி ஆயிரம் பிரேரணை நிறைவேற்றிய சபையில் செய்தது என்ன?

3-வீரவணக்கம் முதல் ஜெயலலிதா வரை மௌன அஞ்சலி உங்களால் வடக்கு முஸ்லீம்கள் விவகாரம்,கிழக்கு படுகொலை தொடர்பில் என்ன செய்தீர்கள்.

4-பல வருடங்களாக தொடர்ச்சியாக முஸ்லீம்கள் விடயத்தில் அராஜகம் புரியும் ஞானதார தொடர்பில் வாய்திறக்காத நீங்கள்,,நேற்று நடந்த மட்டக்களப்பு சம்பவம் தொடர்பில் மௌனம் கலைகின்றீர்கள்!

5-வடகிழக்கு இணைவதால் முஸ்லீம்களுக்கான பாதுகாப்பு மற்றும் அரசியல் அந்தஸ்து அஸ்தமமாகும். பிரிக்கப்பட்ட வடகிழக்கில் இடம்பெறும் அநீதிகளுக்காக ஊமையாக இருக்கும் உங்களால் இணைக்கப்பட்ட வடகிழக்கில் கோமாநிலையாகிவிடும்.

6-உங்களுக்கு வழங்கப்பட்ட பதவிக்கு மட்டயவராக இருங்கள்.அதைமீறி சமூகம் என்ற அமானத்தை உங்கள் தலையில் சுமந்து துரோகிப்பட்டம் பெறவேண்டாம்

7-வடக்கு முஸ்லீம்களின் அரசியல் பலரின் உயிர்த் தியாகங்கள்,இழப்புகள் மீது மீளக்கட்டி அமைக்கப்படுகிறது.இதன்மீது சுயநல அரசியலுக்காக தலையை நீட்டி பாவத்தை சுமக்க வேண்டாம்.

8-வடகிழக்கு இணைப்புக்காக வீதிகளில் போராட்டம் நடத்துவதை நிறுத்தி.வடக்கில் இருந்து வெளியேறி இன்னும் முகம்களில் வாழும் மக்களிடம் ஒருநிமிடமாவது பேசிப்பாருங்கள். நீங்கள் தவறான இடத்தில் இருப்பது தெளிவாகும்.

9-வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் முஸ்லீம்களின் அரசியலை காலில் போட்டு பந்தாடும் போது அதற்கு முஸ்லீம் பெயர்தாங்கிகள் துணைபோனது ஞாபகம் இருக்கிறதா?

10-நான் அமைச்சர் றிசாதையோ அவரது அரசியலையோ ஒருபோதும் ஆதரிப்பதில்லை.இருந்தும் சுமார் 14 வருடங்களாக அந்த மக்களுக்காக விரும்பியோ விரும்பாமலோ பெறும் போராட்டத்தை நடத்துகின்றார்.
இவருடன் சேராவிட்டாலும் புதிய பாணியில் அந்த மக்களுக்காக உங்களால் போராடலாமே.இதைவிடுத்து அவரை அழிக்க முயலும் எதிரிகளோடு சேர்ந்து நாகரீகம் பேசுகிறீர்கள்.

11-வடக்கில் ஒருபள்ளிவாசலை திறந்தீர்கள். ஆனால் 30க்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் இருந்த இடமில்லாமல் போயுள்ள வரலாறு தெறியுமா?

12-ஒரு முஸ்லிமாக இருக்காவிட்டாலும் சரியான அரசியல்வாதியாக இருங்கள்.உங்கள் மனச்சாட்சிக்கு எதிராக பதவி இருக்குமானல் தூக்கி எறியுங்கள்.ஆனால் உங்களுக்கு வாழக்கையில் இதுபோன்ற பதவி கிடைக்கமுடியாது என்பது தவிர்க்க முடியாததே.

13-உங்கள் பதவிக்காலத்தில் எமது சமூகத்தை சார்ந்த எவருக்காவது குறைந்த பட்சம் வீதிச் சுத்திகரிப்பு தொழிலாவது வழங்கினீர்களா?அதிகமானவர்களது இடமாற்றம் தொடர்பில் ஊமையாகவே இருந்தீர்கள்.

14-இந்தியாவில் வழங்கப்பட்ட வீடுகள்,புனர்வாழ்வு அமைச்சினால் கட்டப்படும் வீடுகள் தொடர்பில் ஆயிரம்முறை சபையில் சண்டை பிடிக்கின்றீர்கள். ஒரு நிமிடமாவது புத்தளம் மற்றும் இதர மாவட்டங்களில் கொட்டிலில் வாழும் நமது உறவுகளுக்காக பேசக்கூடாதா?

உங்களை அடமானம் வைத்த மாபியாக் கும்பம் நல்லாட்சி என்ற பெயரில் கிழக்கில் பெறும்பான்மை முஸ்லீம்மக்களால் தூக்கிவீசப்பட்டதை அறிந்திருப்பீர்கள்.

உங்கள் தலைவரை குறைந்தது ஒருமாகாணசபை உறுப்பினராகவாவது தனித்து போட்டியிட்டு சொந்த மண்ணில் வெற்றிபெறச் செய்யுங்கள்.அதன் பின்னர் மற்றைய மாவட்டங்களின் பிரதிநிதி பற்றிப் பேசலாம்.

கடந்த பொதுத் தேர்தலில் மைதிரி,ரணிலால் ஒதுக்கப்பட்ட நீங்கள்,,கடைசியில் உங்கள் எதிரி SLMCல் சரணடைந்தீர்கள்.உங்களுக்கு மக்களும் ஹகீமும் நல்ல பாடம் கற்பித்தார்.உங்களுக்கு தேசியப்பட்டியல் வேண்டும் என்றால் ஏதாவது சிறிய கட்சிகளுக்கு பணம் கொடுத்து வாங்கலாமே.

ஆகவே பதவிக்கு மட்டும் நன்றிக்கடனாக இருங்கள். அதைவிடுத்து வடகிழக்கு இணைப்பு மற்றும் முஸ்லீம்களின் உரிமைகள் பற்றி பேசி சமூகத்தின் இளைஞர்களை பிழையாக வழிநடாத்த வேண்டாம்.இல்லையேல் பதவியை தூக்கி வீசிவிட்டு மக்களுக்காக உண்மையாக பேசுங்கள்.உங்களுக்காக வரலாறும் காலமும் இன்னும் காத்திருக்கிறது.

கடந்த மாகாணசபை மற்றும் உள்ளூராட்சித் தேர்தலில் திருகோணமலையில் போட்டியிட்டீர்கள்.தமிழ் தேசியக் சூட்டமைப்புடன் சேர்ந்து நடாத்திய நாடகத்தால் பல முஸ்லீம் பிரதிநிதிகளை இழந்தோம்.அம்பாறை மாவட்டத்தில் குறைந்தது ஒரு உள்ளூராட்சிப் பிரதிநிதியைக் கூட பெறமுடியாத நீங்கள்.??தேர்தலுக்கு மட்டும் முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை செற்ப வாக்குகளால் குறைக்க சதிகாரர்கள் செயற்பாட்டுக்கு துணை போகின்றீர்கள்.

நீங்களும் உங்கள் கொள்கையும் உண்மையாக இருந்தால் இவரின் இடத்திற்கு எவரையும் நியமிக்காமல் விடுங்கள்.
தற்போதைய மைதிரியை முதலில் ஆதரித்தவர்களும் அவருக்காக கூட்டம் நடாத்தியதும் நீங்கள் தான்.ஆனாலும் உங்களின் பதவிமோகம் கண்ட செயற்பாடுகளால் எந்தக் கட்சியிலும் இடம்கிடைக்கவில்லை.கொள்கைக்காக பேசுபவர்களால இருந்தால் SLMC ,TNAவுடன் எந்த கொள்கைக்காக சேர்ந்தீர்கள்.சமூகம் தற்போது மிகவும் விழிப்படைந்துள்ளது.ஆதலால் அரசியல் பதவிக்காக நேரத்தை வீணடிக்காமல் இஸ்லாமிய மற்றும் சமூகம்சார்ந்த பொதுப்பணிகளைச் செய்யுங்கள்.

ஆகவே நீங்களும் உங்கள் கட்சியும் பேசுகின்ற கொள்கைக்கு உண்மையாக இருங்கள்.பதவியை தூக்கிவீசிவிட்டு சமூகத்திற்காக போராடுங்கள்.பலநூறு ஆசனங்களைப் பெறலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -