பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் ஜந்து சந்தி பகுதியில் உள்ள நூரா மும்மொழி தொடர்பாடல் வர்த்தக நிலைய உரிமையாளர் சனூன் முகம்மது சர்ஜூன் (வயது-35) காலமானார்.
சமூக சேவகரும் தொழிலதிபருமான எம்.சனூனின் புதல்வரான இவர் இன்று (27) யாழ்ப்பாணம் சின்னக்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் அகால மரணமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
யாழ் சோனக தெருவை சேர்ந்த இவர் மன்னாரை பிறப்பிடமாக கொண்ட சிராஜாவின் கணவரும் நாஸர் நாஸிர் ஹாரிஸ் ரஸ்மி அஸ்மி சாஜிர் நாத்ரா டொக்டர் கன்சூரா மஃரிபா கஸ்பியா மௌலவியா சபானா சபீனா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை காலை (28.05.2017) 8 மணிக்கு யாழ் சின்னப்பள்ளி மையவாடியில் இடம் பெற உள்ளது.
சுல்தான் ஜமாலிக் 0773739494
சனூன் நாஸர் 773161416
இந்த ரமழான் நன் நாளிலே அவரின் சகல பாவங்களையும் மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஷ் எனும் சுவர்க்கம் நுழைய இறைவனை பிரார்த்திப்போம்.