இந்தக்கேள்விக்கு கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன் நான் அல்ஜஸீறா பத்திரிகையில் பதில் கொடுத்துள்ளேன். ஆனாலும் இதே கேள்வி இன்னமும் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது.
முஹம்மது நபியவர்களின் வாழ்வில் எதனை அவர்கள் மார்க்கம் என சொல்லியுள்ளார்களோ அதுதான் மார்க்கம். அதுவல்லாத அவர்கள் தமது கலாசாரமாக எதனை நடைமுறைப்படுத்தினார்களோ அதனை ஒரு கலாசாரமாக மட்டும் நாம் ஏற்கலாம்.
உணவு, உடை விடயத்தில் நபியவர்கள் அறபிகள் எதனை கடைப்பிடித்தார்களோ அதனையே கடைப்பிடித்தார்கள். அந்த வகையில் ஜுப்பா எனப்படும் நீள் ஆடை அணிதல், சாறமும் சேர்ட்டும் அணிதல், தலையில் தலைப்பாகை மட்டும் அணிதல், தொப்பி மட்டும் அணிதல், தொப்பியோ தலைப்பாகையோ இன்றி முடியை நடுவால் பிளந்து வார்தல் என பல வகைகளிலும் நபியவர்கள் இருந்துள்ளார்கள். ஆனால் இவை எவற்றையும் மார்க்கம் என நபியவர்கள் சொல்லவில்லை.
தொப்பி அணிந்தால் 10 நன்மை என்றோ அணியாவிட்டால் நரகம் என்றோ சொல்லவில்லை. இதே போன்று நபியவர்கள் அறபிகள் உண்ணும் உணவையே உண்டார்கள். அது பெரும்பாலும் ரொட்டியாக இருந்தது. அதற்காக ரொட்டி சாப்பிடுவது சுன்னத்தானது என நாம் சொல்வதில்லை. எதையும் சாப்பிடலாம் அது ஹலாலாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் எடுத்துக்காட்டு.
இதே போன்று ஒருவர் விரும்பினால் தொப்பி அணியலாம்.தலைப்பாகை அணியலாம். ஜுப்பா போடலாம். சாறம் சேட் அணியலாம். லோங்ஸ் சேட் அணியலாம். சிறுவால் மட்டும்தான் இருக்குமாயின் அதை மட்டும் அணியலாம் என இது விடயம் அவரவர் விருப்பத்தை பொறுத்தது.
இந்த வகையில் தொப்பி போட்டு தொழுதால் விசேட நன்மை என சொல்லப்படவில்லை. தொப்பி போட்டு தொழுவதும் பாவம் இல்லை. ஆனாலும் "உங்கள் அலங்காரங்களை மஸ்ஜிதுக்கு எடுத்துச்செல்லுங்கள்" என்ற குர் ஆனின் கட்டளைக்கு அமைய ஒருவர் இஸ்லாமிய வரையறைக்குள் உள்ள எதனை தனது அலங்காரமாக நினைக்கிறாரோ அதனை அணிந்து செல்லலாம். ஒருவருக்கு தொப்பி அலங்காரமாக தெரிந்தால் அதனை அணிந்து செல்லலாம். தொப்பி இன்றி போவது அலங்காரமாக தெரிந்தால் அவ்வாறு செல்லலாம். அதற்காக தலைவிரி கோல ஹிப்பியாக செல்லக்கூடாது.
சில பள்ளிவாயல்களில் தொப்பி இல்லாதோர் அணிவதற்காக தொப்பி வைத்திருப்பார்கள். இந்நடைமுறையை நபியவர்கள் கற்றுத்தரவில்லை. இவ்வாறு மஸ்ஜிதுன்னபவியில் தொப்பிகள் வைக்கப்பட்டதாக எந்த ஹதீதும் இல்லை.
எனவே இது விசயத்தில் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ள தேவையில்லை. இது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. அதேவேளை தொப்பியே போடாத பலர் நாற்பது வயது தாண்டியபின் தொப்பி போட்டுக்கொள்வதையும் சமூகத்தில் காண்கிறோம். இது அழகிய கலாசாரமாக உள்ளது என அவர்கள் கண்டால் அதில் தப்பும் இல்லை.
-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -