புனித ரமழானில் கட்டார் வாழ் இலங்கை மக்களிடம் உதவியினை எதிர்பார்க்கும் ஓட்டமாவடி சிறாஜியா அறபு கல்லூரி

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

ல்குடா பிரதேசத்தில் மிகவும் பழமைவாய்ந்த அறபு கல்லூரியாக இருக்கின்ற ஓட்டமாவடி சிறாஜியா அறபு கல்லூரியானது சமூகத்தினால் போற்றப்படக்கூடைய உலமாக்களையும், ஆலிம்களையும், புத்திஜீவிகளையும், துறைசார்ந்த மனிதர்களையும் உருவாக்கியுள்ளதோடு சமூகத்தில் தாக்கம் செலுத்தக்கூடிய அரசியல், கலாச்சாரம், சமயம், மார்க்கம் சரிஆ போன்றவற்றில் முக்கிய தேவையான ஆலோசனைகளை தக்க சமயத்தில் வழங்கி வருகின்றது என்பது கல்குடாவின் வரலாறுகளின் ஒன்றாகும்.

அந்தவகையில் பல குறைபாடுகளுடன் இயக்கி கொண்டிருக்கும் குறித்த சிறாஜியா அறபுக்கல்லூரியின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும், புதிதாக சரீஆ கலாபீடத்திற்காக நிருமாணிக்கப்படுகின்ற இடத்திற்கு சுற்றுமதில்களை அமைப்பதற்காகவும் கல்லூரியின் அதிபர் தாஹிர் மெளலவி ஒரு மாதத்திற்கு முன்னர் கட்டார் நாட்டிற்கு சென்று கட்டாரில் வாழும் இலங்கை மக்களிடமும் கல்லூரியின் பழைய மாணவர்களிடமும் நிலைமைகளை எடுத்துகூறியதன் பலனாக கட்டர் வாழும் இலங்கை மக்கள் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு தங்களாலான உதவிகளை அல்லாஹ்விற்காக செலுத்துகின்ற நிலையான தர்மமாக வாரி வழக்கியிருந்தார்கள். அவ்வாறு கல்லூரியின் உடனடி தேவைக்கு உதவிகளை வாரி வழங்கிய கட்டடார் வாழ் எமது சகோதரர்களின் ஈருலக வாழ்வுகளில் அல்லாஹ் நற்பாக்கியம் வழங்க வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவிக்கின்றது சிறாஜியா அறபுகல்லூரியின் நிர்வாகம்.

அந்த வகையில் சிறாஜியா கல்லூரியின் எதிர்கால நடவடிகைகளை கருத்தில் கொண்டு இரண்டாம் கட்டமாக புதிதாக நிருமாணிக்கபடுகின்ற கல்லூரியின் சரிஆ பிரிவிற்கான வளாகத்தினை அமைப்பதற்காக மீண்டும் காட்டார் வாழ் இலங்கை நலன் விரும்பிகளின் உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக சிறாஜியா அறபு கல்லூரியின் பழைய மாணவனும், ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயலின் பேஸி இமாமுனான சகோதரர் முஸ்தபா (சிறாஜி). கட்டார் நாட்டிற்கு ஒரு மாதகால விஜயத்தினை சிறாஜியா அறபு கல்லூரியின் பிரிநிதியாக சென்றுள்ளார்.

அவர் அங்கு வாழுகின்ற கட்டார் வாழ் இலங்கை நலன் விரும்பிகளிடம் 50 காட்டார் றியால்கள் பெறுமதியுடைய டிக்கட் ஒன்றினை கல்லூரியின் தற்போதைய உடனடி தேவைக்காக விநியோகித்து வருகின்றார். அந்த வகையிலே அப்படியான டிக்கட்டினை வாங்குகின்ற சகோதரர்கள் கவனத்தில்கொள்ள வேண்டிய விடயமான டிக்கட்டில் பொறிக்கப்பட்டுள்ள பல உணவகங்களின் விலாசத்திற்கு நீங்கள் சென்று உங்களிடம் இருக்கும் டிக்கட்டினை உணவகங்களில் கொடுத்து பத்து றியால் பெறுமதியுடைய நோன்பு திறப்பதற்கான உணவு பொதியினை பெற்றுகொள்ள முடியும் என்பதனை சிறாஜியா அறபு கல்லூரியின் நிருவாகம் தெரிவிகின்றது.

கட்டார் வாழ் இலங்கை நலன் விரும்பிகள் இவ்வாறு ஐம்பது றியால் பெறுமதியுடைய டிக்கட்டினை கொள்வனவு செய்து சிறாஜியா அறபு கல்லூரியின் புதிய சரிஆ கலாபீடத்தின் நிருமாண திட்டத்திற்காக வழங்குகின்ற நன்கொடையினை சந்தோசப்படுத்துவதற்காகவே மேற்சொன்னவாறு பத்து றியால் பெறுமதியுடைய நோன்பு திறப்பதற்கான உணவு பொதிகளை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை சிறாஜியா அறபு கல்லூரி ஏற்பாடு செய்துள்ளது.

எனவே கட்டார் நாட்டில் வாழுகின்ற இலங்கை சகோதரர்கள் ஓட்டமாவடி சிறாஜியா அறபு கல்லூரியின் வளர்சிக்காகவும், புதிய கலாபீட நிருமாண பணிக்காகவும் குறித்த டிக்கட்டினை இப்புனித ரமழானில் பெற்றுக்கொள்வதோடு குறித்த டிக்கட்டில் பொறிக்கப்பட்டுள்ள இரண்டு தொலை பேசி இலக்கங்களுடனும் தொடர்பினை ஏற்படுத்தி மேலதீக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். அத்தோடு கல்லூரின் வளர்சிக்காக இவ்வாறு உதவிகளை வழங்கும் அதே நேரத்தில் தர்மங்களில் அதியுயர் தர்மமாக பார்க்கப்படுகின்ற நிலையான தர்மங்களை அல்லாஹ்விற்காக கொடுத்த பாக்கியசாலியாக கட்டார் வாழ் இலங்கை நலன் விரும்பிகள் அணைவரும் மாறவாண்டும் என அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாக சிறாஜியாவின் உப தலைவரும், உப தபாலக அதிபருமான மெளலவி அஸ்ரஃப் (மன்பஈ) மற்றும் கல்லூரியின் அதிபரும் ஒஸ்தாத்துமான மெளலவி தாஹிர் ஆகியோர் கட்டார் வாழ் இலங்கை மக்களிடம் வேண்டி நிற்கின்றனர்.

குறித்த விடயம் சம்பதமாக மேலும் தெளிவான முறையில் சிறாஜியாவின் உப தலைவரும், உப தபாலக அதிபருமான மெளலவி அஸ்ரஃப் (மன்பஈ) மற்றும் கல்லூரியின் அதிபரும் ஒஸ்தாத்துமான மெளலவி தாஹிர் ஆகியோர் கட்டார் வாழ் இலங்கை மக்களுக்காக வழங்கிய வேண்டுகோள்களின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -