அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேசத்திட்குட்பட்ட விளாங்குளம் கிராமமானது 1964 ம் ஆண்டு குடியேற்றப்பட்டு 85 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இன்றுவரை காணி அனுமதிப்பத்திரம் மற்றும் குடிநீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட இம்மக்கள் தொடர்ச்சியாக தமது பிரச்சினைகளை உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி வந்திருந்தனர்.
அந்த வகையில் இன்று மேலதிக உதவி அரசாங்க அதிபர் (காணி) பிரதேச செயலாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதுடன் விரைவில் தீர்வினைப்பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தாகவும் அம்மக்கள் தெரிவித்தனர்
இக்கிராமக்காணிகள் வன இலாகாவிற்கு சொந்தமானதென வன இலாகாவினால் எல்லைக்கற்கள் இடப்பட்டிருந்தமையே அவர்களுக்கான மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு காரணமெனவும் அம்மக்கள் தெரிவித்தனர்.