அட்டாளைச்சேனை அறபா வித்தியாலத்தில் கெளரவிப்பு நிகழ்வு - அமைச்சர் நஸீர் பிரதம அதிதி

சப்னி அஹமட்
ட்டாளைச் சேனைஅறபா வித்தியாலத்தில் 2016ஆம் ஆண்டு அணையாத துருவங்களாக மிளிர்கின்ற சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையந்த 17 மாணவர்களையும், அதிபர், கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கெளரவிக்கின்ற நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் இன்று (25) பாடசாலையில் இடம்பெற்ற.இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். 

இங்கு கல்வித்துறையில் பெரும் சேவையாற்றி ஓய்வு நிலையில் இருக்கும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் ஏ.சீ.சைபுதீன், அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் பிரதியதிபர் அப்துல் லத்தீப், அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் உப பீடாதிபதி உபைதுல்லா, சாதனை படைத்த 17 மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்கள், பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர் ஆகியோருக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு கொண்ட சுகாதார அமைச்சர் நினைவுச் சின்னம் வழங்கிக் கெளரவித்ததுடன் தனது சொந்த பரிசுகளையும் வழங்கி வைத்தார். 

இந்நிகழ்வுவின் போது கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை, அக்கரைப்பற்று வலயக்கல்விப்பணிப்பாளர் ஹாசீம், உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -