அப்துல்சலாம் யாசீம்-
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் சுகாதார திணைக்களத்தில் வெற்றியீட்டியவர்களை கௌரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இன்று (03) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாண சுகாதார சேவைகள் பணிமனையைச்சேர்ந்தவர்கள் வலைப்பந்து மற்றும் கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளில் வெற்றியீட்டியினர்.
இவ்வூழியர்களை கௌரவித்து பரிசில்களை வழங்கியதுடன் கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்துக்கு பாராட்டையும் பெற்றுத்தந்தவர்கள் எனவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
இதில் வலைப்பந்தாட்டம் மற்றும் கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கே பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.