இலங்கையில் பத்தொன்பது தேசியக்கல்வியற் கல்லூரிகள் காணப்படுகின்றன இதனூடாக எமது நாட்டுக்குத் தேவையான ஆசிரியர்கள் பயிற்று விக்கப்படுகிறார்கள் வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் மாணவர்கள் செயற்பாடு சார்ந்த அனுபவங்களைப் பெறுவதற்கு ஆசிரியர்கள் மாணவர்களை வழிப்படுத்த வேண்டும்.என்று அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரி உப பீடாதிபதியும் கல்விமாணி பட்ட கற்கைநெறி இணைப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எஸ் என் ஏ அறூஸ் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரி ஆசிரிய பயிலுர்கள் விரிவுரையாளர்கள் அடங்கிய குழுவினர் இறக்காமம் சது/அஸ்றப் மத்திய கல்லூரி, சது/றோயல் கனிஸ்ட கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு " பாடசாலையும் சமூகமும்" எனும் தொனிப் பொருளில் களச் செயட்பாட்டை அண்மையில் மேற்கொன்டனர் இன் நிகழ்வில் நடைபெற்ற கலாசார விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
பாடசாலையானது பரந்து விரிந்த சமூகத்தினுள் இயங்குகின்றது பாடசாலை சமூகத்தின் உப தொகுதியாகும் பாடசாலையானது சமூகத்தின் எதிர்பார்ப்புக்களையும் தேவைகளையும் நிறைவு செய்வதற்காக கருமமாற்றுகின்ற நிறுவனமாகும். சமூகத்திலிருந்து வளங்களை பெற்றுக் கொள்ளவும் மாணவர்களின் அடைவு மட்டத்தை விருத்திசெய்யவும் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றவும் சமூகத்தை சீர்படுத்தவும் பாடசாலையானது சமூகத்துடன் தொடர்புகளை வைத்திருக்கவேண்டும் பாடசாலையின் வளர்ச்சிக்கு சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம் பாடசாலையிலிருந்து சமூகமும் சமூகத்திலிருந்து பாடசாலையும் நன்மைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்வின் முதல்நாள் ஆசிரிய பயிலுனர்களாள் பாடசாலையில் சிரமதானமும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலமும் வீதி நாடகமும் கற்பித்தல் நிகழ்வும் நடைபெற்றது. இவ்வைபவத்தில் விரிவுரையாளர் கே எஸ் கனேசரத்தினம் உட்பட பல விரிவுரையாளர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
ஐ. ஹுஸைன்தீன்(B Ed)