பட்டதாரிகளுக்கு தாமதமில்லாமல் தொழில் கிடைக்க ஆவனசெய்வோம் - காரைதீவில் சம்பந்தன்

காரைதீவு நிருபர் சகா-
ரசதுறைகளில் நிரப்பப்படாதுள்ள வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும் அதேவேளை பட்டதாரிநியமனங்களின்போது தமிழ்ப்பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டிருந்தால் அதையிட்டு பேசி நிவர்த்திக்க நடவடிக்கைஎடுப்போம். தனியார்துறைகளிலும் இதையிட்டு சிந்திக்கலாம். எனவே தாமதமில்லாமல் உங்களுக்கான தொழில் பெற்றுத்தர நடவடிக்கையை மேற்கொள்வோம்.

இவ்வாறு காரைதீவில் 64நாளாக சத்தியாக்கிரகமிருக்கும் அம்பாறை மாவட்ட பட்டதாரிகளைச்சந்தித்த இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை அக்கரைப்பற்றில் நடந்த மேதின நிகழ்விற்கு சென்றுவிட்டு திரும்பும்வழியில் காரைதீவில் பிற்பகல் 3மணியளவில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

அங்கு அவர் மேலும் கூறுகையில்;

நாம் உங்களது நிலைமைகளை தெளிவாக நேரில் புரிந்துகொண்டோம். கொழும்பு சென்றதும் சம்பந்தப்பட்ட தரப்பினரோடு பேசி விரைவாக தொழிலைப்பபெற்றுத்தர ஆவன செய்வோம் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கருத்துரைக்கையில்:

பட்டதாரிகள் விடயத்தில் மத்திய அரசின் முகாமைத்துவ சேவைப்பிரிவிலிருந்து ஆளணி அங்கீகாரம் கிடைக்கப்பபெறவில்லையென சகல வேலையில்லாப்பட்டதாரிகளும் கூறுகின்றார்கள். எனவே நாம் கொழும்பு சென்றதும் ஜனாதிபதி பிரதமர் ஆகியோடு கலந்துரையாடி அதனை விரைவாக பெற்றுத்தர நடவடிக்கை எடுப்போம்.

கலைப்பட்டதாரிகள் கூடுதலாக இருப்பதாகத் தெரிகிறது. இருமொழிமூல ஆசிரியர்தெரிவுக்கு தமிழ்மொழிமூல பட்டதாரிகளை இன்னும் எடுக்கவில்லையென்று அறிகின்றோம். சுமார் 2000பேரளவில் தேவைப்படுவதாகவும் தெரிகிறது. அதையிட்டும் கவனத்திற்கொள்ளவிருக்கின்றோம். உங்களுக்கு பரீட்சை வைக்கவேண்டும் என்று நாம் சொல்லவில்லை. இன்னும் கணித விஞ்ஞான விளையாட்டு உத்தியோகத்தர் நியமனங்கள் பாடசாலைக்குத்தேவைப்படுகின்றன. அவற்றை நிரப்ப உங்களிடம் விஞ்ஞானப்பட்டதாரிகள் இருந்தால் தாருங்கள். இன்வரும் காலங்களில் உயர்கல்விக்கான 5வருட படிப்பை திட்டமிடவேண்டியுள்ளது. உங்களிடம் வெற்றிடப்பட்டியல் இருந்தால் தாருங்கள். அவற்றை நிரப்பித்தர நடவடிக்கை எடுக்கலாம். என்றார்.

பட்டதாரிகள் கருத்துரைக்கையில்:

இதுவரை யாழ். இராமநாதன் மட்டு. விபுலானந்த பல்கலைக்கழத்தில் பயின்ற 650 நுண்கலைப்பட்டதாரிகளுக்கு இதுவரை அரச தொழில் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நுண்கலைகள் வளர்வதெப்படி? அம்பாறை மாவட்டத்தில் 6 மாகாணசபை உறுப்பினர்கள் 5பாராளுமன்ற உறுப்பினர்கள்ளுள்ளனர். அவர்களால் எந்தப்பிரயோசனமுமில்லை. பாராளுமன்றில் ஒரு கதையும் கதைக்கவில்லை. அரசிலிருந்து எந்த நல்ல சமிக்ஞையும் கிடைக்கவில்லை.

கிழக்கு முதலமைசச்ர் தொடக்கம் வருவோர் போவோர் எல்லாம் கால அவகாசம் கேட்கிறார்களே தவிர ஆனது ஒன்றுமில்லை. நீங்கள் அரசின் முக்கியமானவர். எமது பிரச்சினையைத் தீர்த்துத்தாருங்கள் என்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -