எம்.வை.அமீர்-
கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் சிரேஸ்ட உறுப்பினரும் சுகாதார பிரதி அமைச்சருமான கௌரவ அல்ஹாஜ். பைசால் காசிமுக்கும் கல்முனை மனிதவள அபிவிருத்திக்கான அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்குமிடையிலான கல்முனை பிராந்திய சுகாதார அபிவிருத்தி தொடர்பிலான விசேட கலந்துரையாடல் நிகழ்வு 21.05.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 08.30மணியளவில் அமைச்சரின் பிரத்தியோக காரியலத்தில் இடம்பெற்றது
மேற்படி விசேட கலந்துரையாடல் நிகழ்வில் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் சார்பாக தலைவர் அல்ஹாஜ்.எஸ்.அப்துஸ் சமத், செயலாளர் அல்ஹாஜ்.எஸ்.எல்.எம்.இப்ராஹீம்,வைத்திய கலாநிதி எம்.எச்.ரிஸ்பின், வைத்திய கலாநிதி ஏ.சி.எம். அமீன் பொறியியலாளர் ஏ.ஜே. ஹலீம் ஜௌசி மற்றும் ஏனைய அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி விசேட கலந்துரையாடலில் கல்முனைப் பிராந்தியம் சுகாதாரத்துறையில் குறுகிய காலத்தில் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதற்கு உந்து சக்தியாக சுகாதர பிரதி அமைச்சரின் பங்கு அளப்பெரியது. அவர் கடந்த மாதம் கல்முனை மனிதவள அபிவிருத்திக்கான அமைப்பினருடனான (HRDOK) சந்திப்பின் போது வாக்களித்தது போன்று கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியின் பணிமனை கட்டிட நிறுமானத்துக்கு முதற்கட்டமாக10 மில்லியன் ரூபாக்களை வழங்கி அதற்க்கான முதற்கட்ட வேலைப்பாடுகளை துரிதமாக நடப்பதற்கு ஆவன செய்த அமைச்சருக்கு கல்முனை மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிப்பதில் கல்முனை மனிதவள அபிவிருத்திக்கான அமைப்பு பெருமிதமடைகின்றது.
மேலும் கல்முனைப் பிராந்தியத்தின் சுகாதாரத்துறையின் மற்றொரு பரிணாமமாக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிக்கு 1400 மில்லியன் ரூபாக்களுக்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்பித்து அதை அங்கீகாரத்துடன் செயற்படுத்தி எமது கல்முனைப் பிராந்தியத்தின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய மூளுமூச்சுடன் பாடுபடும் அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதோடு கட்டிட அமைவுக்கான டெண்டர் கோரல் துரிதப்படுத்தல் அவசியமும் மற்றும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அண்மையில் சுகாதார பிரதி அமைச்சரினால் ஆரம்பித்துவைக்கப்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கான சிகிட்சைப் பிரிவின் (Dialysis Unit) மேன்படுத்தல் மற்றும் அதற்கான நவீன உபகரணங்களின் தேவைப்பாடுகள், விசேட வைத்திய துறைசார் நிபுணர்களின் தேவைகளும் வலியுறுத்தப்பட்டது.
இதன் போது அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில் சுகாதார பிரதி அமைச்சர் என்ற ரீதியில் எதிர்காலத்தில் எமது பிராந்திய மக்களின் நலன்கருதி நவீனத்துப் படுத்தப்பட்ட இலத்தினியல் வசதிகளுடன் கூடிய ஆய்வுகூடங்கள் மற்றும் சத்திர சிகிட்சைப் பிரிவுகள் மற்றும் விசேட துறைசார் வைத்திய நிபுணர்களைக் கொண்ட வைத்திய பிரிவுகளைத் பிராந்திய வைத்திய சாலைகளில் தாபிப்பதன்மூலமும் எமது மக்களின் சுகாதார தேவைகளைப் பூர்த்த்தி செய்யக்கூடிய சிறந்த இடமாகவும் எமது மாகாணத்தை சுகாதார வசதிகளில் தன்னிறைவடைந்த மாகாணமாக மாற்றுவதில் முனைப்புடன் செயற்ப்பட இருப்பதாகவும் அதற்க்கான அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்பிக்கப்பட இருப்பதாகவும் சுகாதார பிரதி அமைச்சர் அல்ஹாஜ். பைசால் காசிம் கலந்துகொண்ட அங்கத்தவர்களிடத்தில் உறுதியளித்தார்கள்.