எம்.ஏ. கீத் திருகோணமலை-
கிண்ணியா பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட கிண்ணியா-3 அண்ணல் நகர்பிரதேசத்தில் 468750ரூ பெறுமதியான கஞ்ஞாகலந்த மதனமோதக லேகியம் விற்பனைக்காக எடுத்துசெல்லப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் திருகோணமலை பிராந்திய விஷத்தன்மை போதைபொருள் ஒழிப்பு பிரிவிற்கு கிடைத்த இரகசிய அடுத்து கைப்பற்றப்பட்டது.விற்பனைக்காக கொண்டுசென்ற அண்ணல் நகரைச்சேர்ந்த 54 வயதுடைய நபரும் கைதுசெய்யப்பட்டார்.கைதுசெய்யப்பட்ட நபரையும் அவர் வசம் இருந்த மதனமோதகங்களையும் விஷத்தன்மை போதைபொருள் பிரிவினர் கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.சம்மந்தப்பட்டவரையும் பொருட்களையும் இன்று நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தும் நடவடிக்கைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொள்கின்றனர்.