ஐ.ஏ.காதிர் கான்-
ஈரான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் முஹம்மது ஸைரி அமீரானி , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவை, இன்று (24) அமைச்சில் சந்தித்தார். இதன்போது, இரு நாடுகளுக்கிடையிலும் தற்போதுள்ள உறவுகள் மேலும் வலுவடைய வேண்டும் என, இரு தரப்பினருக்கு மத்தியிலும் கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன. நிர்வாக நடவடிக்கைகளை தொடர்ந்தும் எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
நல்லாட்சியின் கீழ், உள்ளூராட்சி நிர்வாகம் தொடர்பிலான சிறந்த அமைச்சொன்று, அமைச்சருக்குக் கிடைத்துள்ளதையிட்டு, தாம் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த தூதுவர், இந்த அமைச்சின் ஊடாக மக்களுக்குத் தேவையான சிறந்த முகாமைத்துவ நிர்வாகப் பணியொன்று, முன்னெடுக்கப்பட்டு வருவது குறித்து தாம் பெருமைப்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.