இந்த அரசைக் கவிழ்பதற்கு எண்ணவெல்லாம் செய்ய முடியுமோஅவை அனைத்தையும் செய்து பார்க்கிறது மஹிந்த அணி.
இந்த அரசு விடுகின்ற சிறிய தவறுகளைக்கூட பெறிதுபடுத்தி அரசியல் இலாபம் அடைந்து வருவதை நாம் காண்கிறோம்.
அந்த வகையில்,மே தினக் கூட்டத்தை பெறிதும் பயன்படுத்திய மஹிந்த அணி அதே வேகத்தில் இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தையும் பயன்படுத்தத் திட்டமிட்டது.
சர்வதேச எதிர்ப்பு விவகாரத்தில் அதிக ஆர்வம் உள்ள விமல் வீரவன்ஸவிடமே அந்தப் பனி மஹிந்தவால் ஒப்படைக்கப்பட்டது.அவரும் மகிழ்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
மோடியின் விஜயத்துக்கு கறுப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பை வெளியிடுவதற்கு அவர் தீர்மானித்தார்.
இறுதியில் மஹிந்த அந்த முடிவை மாற்றி மோடியைச் சந்திப்பதற்கு ஆசைப்பட்டார்.இதை விமலிடம் கூறி கறுப்புக் கொடி போராட்டத்தை நிறுத்துமாறு மஹிந்த உத்தரவிட்டார்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபடுமாறு இவர்கள் மக்களுக்கு அழைப்பு விடுத்ததால் அதை வாபஸ் பெற முடியாத நிலை விமலுக்கு.
மஹிந்தவின் கயிற்றை விழுங்கியதால் விமலால் எதுவும் செய்ய முடியவில்லை.வாபஸ் வாங்கினார்.வாபஸ் வாங்கியமைக்கு விளக்கம் ஒன்றையும் கொடுத்தார்.
"வெஸாக் தினத்துக்கு முன்பே மோடி வருவார் என்று சொல்லப்பட்டது.அந்த வருகையை எதிர்ப்பதற்குத்தான் நாம் தயாரானோம்.ஆனால், அவர் வெசாக் தினத்தில் கலந்துகொள்வதற்காக வந்துவிட்டார்.இப்படியொரு தினத்தில் கலந்துகொள்வதற்காக வருபவரை எதிர்ப்பது இலங்கை மக்களின் பன்பு அல்ல." என்று கொஞ்சமும் வெட்கப்படாமல் கூறிவிட்டார்.
இதெல்லாம் நாம் பார்த்துப் பார்த்துப் பழகிப் போன பல்டிதானே
எம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர்-