அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் ஒரே ஒரு முபையில் அப்பிளிக்கேஷன்

மெரிக்க வரையறைகளின்படி ஜனாதிபதியானவர் பாதுகாப்பு கருதி இலத்திரனியல் சாதனங்களை பயன்படுத்துவதில் பாரிய கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன.

இதனால் அவர்களுக்கென விசேடமாக தயாரிக்கப்பட்ட இலத்திரனியல் கருவிகளே வழங்கப்படுவது வழக்கம்.இதேவேளை அவர்கள் பயன்படுத்தும் கணனி மற்றும் மொபைல் சாதனங்களில் மூன்றாம் தரப்பினரின் மென்பொருட்கள் பயன்படுத்துவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் இந்த வரையறைகளை மீறியுள்ளார்.அதாவது இவர் ஆப்பிள் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ஐபோனை பயன்படுத்தி வருகின்றார். அதுமட்டுமல்லாது அதில் பிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டரின் அப்பிளிக்கேஷனையும் நிறுவி பயன்படுத்துகின்றார்.

தனது செயற்பாடுகளை வெளிக்கொணரவும், உலக நடப்புக்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் இதனை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் டுவிட்டர் தவிர வேறு எந்த மூன்றாம் தரப்பு அப்பிளிக்கேஷனையும் நிறுவுவதற்கு குறித்த கைப்பேசியின் பாதுகாப்பு முறைமை அனுமதிக்காது என்பது சற்று ஆறுதலான விடயம் ஆகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -