எரிச்சலும் எரித்தலும்
+++++++++++++++++
Mohamed Nizous
சோம்பலாகிச்
சொத்து சேர்க்காதவன்கள்
சாம்பலாக்கிச்
சந்தோசப் படுகிறான்கள்
புழுத்துப் போன
பொறாமைத் தீயால்
கொளுத்திப் போட்டு
குதூகலிக்கிறார்கள்
விடிந்து விட்டதா என
வினவும் கேள்வியுடன்
எரிந்து விட்டதா எனவும்
இன்னும் ஒரு கேள்வி
ஒவ்வொரு விடியலிலும்
உள் மனம் கேட்கிறது
உச்சி 'மொட்டை'யான
ஒரு சில தீக் குச்சுகள்
மிச்சமுள்ளதை எரிக்க
மிட் நைட் வரை காத்திருக்கின்றன.
மின் 'சார'த்துக்கும்
மிருக 'ஞான'ம் உண்டு
தொப்பி போட்ட கடைகளையே
தொடர்ந்து எரிக்கிறது
ஆதலால்
மின் சார சக்தி என்பதை
ஞான சார சக்தி என
நாங்கள் அழைக்கலாம்.
நாய்கள் குரைப்பதற்காய்
நாங்கள் குரைப்பதில்லை
நாய்கள் எரிப்பதற்காய்
நாங்கள் எரிப்பதில்லை
ஆனால்.....
அப்படியே விடயத்தை
ரப்பிடம் ஒப்படைப்போம்
எப்படி பதில் வருமென
எதிர்காலம் காட்டும்....!