சாய்ந்தமருது இளைஞர் சேவை காரியாலயம் தேவை இல்லையேல் வீதியில் இறங்கிப் போராடுவோம்

றியாத் ஏ. மஜீத்-

சாய்ந்தமருதிலுள்ள இளைஞர் சேவை கிழக்கு மாகாண காரியாலயம்இடமாற்றப்பட்டதை கேள்வியுற்ற கல்முனை தொகுதி இளைஞர் பாராளுமன்றஉறுப்பினர் தில்ஷாத் தலைமையிலான குழுவினர்; திடீரென குறித்தகாரியாலயத்திற்கு சென்று நேற்று (02) செவ்வாய்க்கிழமைபார்வையிட்டுள்ளனர்.

இவ்விடயம் சம்பந்தமாக மேலும் தெரியவருவதானது,

இளைஞர் சேவை கிழக்கு மாகாண காரியாலயம் கடந்த சில நாட்களாகமூடப்பட்டிருந்ததை அறிந்த கல்முனை தொகுதி இளைஞர் பாராளுமன்றஉறுப்பினர் எப்.எம்.தில்ஷாத் தலைமையிலான குழுவினர் குறித்தகாரியாலத்தினை பார்வையிட சென்ற போது காரியாலயம்மூடப்பட்டிருந்ததையும் குறித்த காரியாலயத்தின் பெயர் பலகைஅகற்றப்பட்டிருந்ததையும் கண்ணுற்ற மேற்படி குழுவினர்ஆத்திரமடைந்துள்ளனர்.

இதனையெடுத்து மேற்படி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தில்சாத்தலைமையிலான குழுவினர் கிழக்கு மாகாண காரியாலயம்இடமாற்றப்பட்டமை தொடர்பாக சாய்ந்தமருது இளைஞர்; சேவை மாவட்டஅதிகாரி ஏ.லத்திபை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது இளைஞர்; சேவை மாவட்ட அதிகாரி ஏ.லத்திப் தெரிவிக்கையில்,

இளைஞர் சேவை கிழக்கு மாகாண காரியாலயம் அம்பாறைக்குஇடமாற்றப்பட்டமை தனக்கு தெரியாது என தெரிவித்துள்ளதுடன் மேற்படிசாய்ந்தமருதிலுள்ள காரியாலத்தில் திருத்த வேலைகள்மேற்கொள்ளவுள்ளதால் குறித்த காரியாலத்தை அம்பாறைக்குமாற்றியுள்ளதாக மாகாண பணிப்பாளர் தன்னிடம் கூறியதாக இதன்போதுதெரிவித்தார்.

மேலும் இளைஞர் சேவை கிழக்கு மாகாண காரியாலயத்திற்காக கடிதங்கள்இன்றுவரை சாய்ந்தமருது காரியாலயத்திற்கே வருவதாகவும் அவர் மேலும்தெரிவித்தார்.

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தில்சாத் குறிப்பிடுகையில், குறித்தமாகாணக் காரியாலயத்தை இடமாற்றுவதற்கு இங்குள்ள முஸ்லிம்அதிகாரிகளும் காரணமாகவுள்ளனர். தேவை ஏற்படின் குறித்த அதிகாரிகளின்பெயர்களையும் வெளியிடுவேன் எனவும் தெரிவித்தார்.

குறித்த காரியாலயத்தை இடமாற்ற மேற்கொண்ட நடவடிக்கைகளைதடுப்பதற்கு மாவட்ட அரசியல் தலைமைகள் மாவட்டத்திற்கு வெளியே உள்ளஅரசியல் தலைமைகள் மற்றும் இலங்கை இளைஞர்; சேவை மன்ற தவிசாளர்ஆகியோரைக் கொண்டு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதும் அதுபயனளிக்கவில்லை.

இருந்தும் மேற்படி மாகாணக் காரியாலயத்தை கொண்டு செல்வதற்குஅனுமதிக்கமாட்டோம். இதனை தடுப்பதற்கு இளைஞர்களை ஒன்றுதிரட்டிகளத்தில் இறங்கிப் போராடுவோம் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதில் இளைஞர் ஒன்றிய அமைப்பின் தலைவர் எம்.ஆஷிக், மிஸ்ரோஅமைப்பின் தலைவரும் சாய்ந்தமருது இளைஞர் சம்மேளன பிரதித்தலைவருமான இஸ்மாயில் இக்தார், சாய்ந்தமருது இளைஞர் சம்மேளனதலைவர் எம்.தானிஸ், ஸ்மார்ட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர்எம்.ரிஸ்கான், சாய்ந்தமருது இளைஞர் சம்மளனேத்தின் உப செயலாளர் ஏ,எம்.பயாஸ் அஹமட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -