நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்வதால் நாளைய தினமும் சில பாடசாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் தென் ஆகிய இரண்டு மாகாணங்களில் உள்ள சகல பாடசாலைகளும் நாளைய தினம் (29) மூடப்படும் என்று மாகாண கல்வி திணைக்களங்கள் அறிவித்துள்ளன. இதனிடையே, இரத்தினபுரி மற்றும் நிவித்திகல ஆகிய கல்வி வலயங்களுக்கு கீழுள்ள சகல பாடசாலைகளும் நாளை மூடப்படும் என்று சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று முன்தினமும் சீரற்ற காலநிலை காரணமாக சப்ரகமுவ மாகாணத்தில் சகல பாடசாலைகளும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.