ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலையில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கை வண்டில் மூலம் டெங்கு பெருகும் இடங்களை கட்டுப்படுத்தும் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகான அங்குராட்பண நிகழ்வு நேற்று 9ம் திகதி ஆரம்பிக்கபட்டது.
அதனடிப்படையில் தினமும் தொடர்சிசயாக பணியாற்றக் கூடிய 20 தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டள்ளது. இவர்கள் தினமும் தொடர்ச்சியாக கை வண்டில்கள் மூலம் நீர்தேங்கக் கூடிய கழிவுகளை அகற்றுவார்கள் .
இதன் மூலம் நீண்ட காலம் அழியாமல் இருக்கும் டெங்கு கிருமி மழைநிர் பட்டவுடன் முட்டையிட்டு டெங்கு நுளம்புகளை உருவாக்கி டெங்கு நோயை ஏற்படுத்தும் வாய்ப்பு இல்லாமல் தடுக்கபடுகிறது. இவ்வாறான பரீட்சாத்த நடடிக்கை ஏற்கனவே உப்புவெளி பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றியளித்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.